26 செப்., 2010

அமெரிக்காவில் ஆண்டுதோறும் 20 ஆயிரம் பேர் இஸ்லாத்தை தழுவுகின்றனர்

வாஷிங்டன்,செப்.26:அமெரிக்காவில் இஸ்லாத்திற்கு எதிரான அவதூறு பிரச்சாரங்கள் மும்முரமாக நடக்கும் வேளையிலும் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

வருடந்தோறும் 20000 பேர் இஸ்லாத்தை தழுவி வருவதாக பிரஸ் டிவி கூறுகிறது.

மால்கம் எக்ஸ் எழுதிய புத்தகங்கள் தன்னை இஸ்லாத்தை நோக்கி ஈர்த்ததாக சமீபத்தில் கிறிஸ்தவ மதத்திலிருந்து விலகி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட உமர் அப்துல் வஹாப் கூறுகிறார். தற்போது இவர் வெர்ஜீனியாவில் தாருல் ஹிஜ்ரா இஸ்லாமிய மையத்தில் பாடம் நடத்துகிறார். தான் இஸ்லாத்தை ஏற்ற பிறகு தன்னிடம் ஏற்பட்ட மாற்றம் தனது பெற்றோர்களையும் ஈர்த்ததாக கூறுகிறார் அப்துல் வஹ்ஹாப்.

செப்.11 தாக்குதல் நினைவு தினத்தையொட்டி ஃப்ளோரிடா சர்ச்சின் பாஸ்டர் புனித திருக்குர்ஆனை எரிப்பதற்கு விடுத்த அழைப்பைத் தொடர்ந்து அதிகம் பேரை திருக்குர்ஆனின் படிப்பதற்கு தூண்டியதாக அவர் கூறினார்.

சுதந்திரமான முறையில் மதக் கடமைகளை நிறைவேற்ற இயலும் சூழல் உருவாவதுதான் தங்களது கனவு என தாருல் ஹிஜ்ரா இஸ்லாமிய மையத்தின் இயக்குநர் இமாம் ஜவ்ஹரி அப்துல் மாலிக் கூறுகிறார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அமெரிக்காவில் ஆண்டுதோறும் 20 ஆயிரம் பேர் இஸ்லாத்தை தழுவுகின்றனர்"

கருத்துரையிடுக