1 செப்., 2010

முறைகேடான சொத்து விவரம் பற்றிய தகவல்: ஸ்விட்சர்லாந்துடன் இந்தியா ஒப்பந்தம்

புதுடெல்லி,செப்.1:ஸ்விட்சர்லாந்தில் இந்தியர்கள் வைத்துள்ள முறைகேடான சொத்து விவரம் குறித்த தகவலை அறிந்து கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பேசுகையில், இந்தியா வந்துள்ள ஸ்விட்சர்லாந்து வெளியுறவு அமைச்சர் மிஷெலின் காம்ரே-யுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்த விவரத்தை வெளியிட வேண்டும் என்றார்.

அதற்கு பதிலளித்த முகர்ஜி, இந்த ஒப்பந்தத்தால் ஸ்விட்சர்லாந்து வங்கிக் கணக்கு விவரத்தை அறிந்து கொள்ள முடியாது என்றார்.இரு நாடுகளிடையே இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் (டிடிஏஏ) கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அந்நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் வைத்துள்ள வங்கிக் கணக்கு விவரத்தைப் பெற முடியாது. 1945-ம் ஆண்டு நாஜிக்கள் போட்டு வைத்திருந்த கணக்கு விவரத்தை மட்டுமே அந்நாட்டு வங்கிகள் வெளியிட்டன.

இந்தியாவுக்கு நிகரான நாட்டுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.அந்நாடு, நமக்குக் கீழான நிலையில் உள்ள நாடு அல்ல. அந்நாட்டு இறையாண்மை, சட்ட திட்டங்களை நாம் மதித்தாக வேண்டும்.இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் அந்நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் பற்றிய தகவலைப் பெற முடியாது.முன்னர் ஸ்விட்சர்லாந்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமானது, வரி விதிப்பு தொடர்பானது. இத்தகைய விவரத்தை அமலாக்க இயக்குநரகம் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு அளிப்பதில் எவ்வித தடையும் கிடையாது என்பதாகும்.

இந்த ஒப்பந்தம் குறித்து பல உறுப்பினர்கள் பேச முயன்றபோது, அடுத்த கூட்டத் தொடரில் இதுகுறித்து விரிவாக விவாதிக்கலாம் என்றார் முகர்ஜி.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "முறைகேடான சொத்து விவரம் பற்றிய தகவல்: ஸ்விட்சர்லாந்துடன் இந்தியா ஒப்பந்தம்"

கருத்துரையிடுக