1 செப்., 2010

அமைச்சர்கள் அடிக்கடி வெளிநாடு செல்லத் தடை: பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவு

டெல்லி,செப்.1:மத்திய, மாநில மந்திரிகள் வெளிநாடுகளுக்கு செல்வது சமீப காலமாக அதிகரித்துள்ளது. சில மந்திரிகள் குறிப்பாக சரத்பவார், அனந்த சர்மா ஆகியோர் அடிக்கடி வெளிநாடு செல்வது தெரிய வந்தது.

அமைச்சர்களின் வெளிநாட்டு மோகத்தை கட்டுப்படுத்த பிரதமர் மன்மோகன் சிங் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அவரது உத்தரவின் பேரில் மத்திய, மாநில மந்திரிகள் வெளிநாடு செல்வதை முடக்க புதிய விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளது.

அதன்படி மத்திய, மாநில மந்திரிகள் தங்களது தனிப்பட்ட பயணம் குறித்தும் பிரதமர் அலுவலகத்திடம் முன் கூட்டியே தகவல் கொடுத்து ஒப்புதல் பெற வேண்டும். தனிப்பட்ட பயணம் பற்றிய முழு விவரங்களையும் தரவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மத்திய, மாநில மந்திரிகள் வெளிநாட்டுக்கு செல்வதை தவிர எந்த தேதியில் திரும்பி வரஉள்ளனர் என்பதையும் சரிபார்த்து கண்காணிக்க பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டுள்ளார்.

இது தவிர வெளிநாட்டுக்கு போகும் ஒவ்வொரு தடவையும், இதற்கு முன்பு எத்தனை தடவை வெளிநாட்டுக்கு சென்று வந்துள்ளார் என்ற தகவலையும் மந்திரிகள் கொடுக்க வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் குறிப்பிட்ட ஒரே நாட்டுக்கு எந்த மந்திரியாவது அடிக்கடி சென்று வந்தால், அது பற்றி தன் கவனத்துக்கு கொண்டு வருமாறும் பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டுள்ளார். பிரதமரின் இந்த உத்தரவு அமைச்சரவை செயலகம் மூலம் அனைத்து மந்திரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அமைச்சர்கள் அடிக்கடி வெளிநாடு செல்லத் தடை: பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவு"

கருத்துரையிடுக