21 செப்., 2010

அஃப்ஸலின் கருணை மனு: காரணத்தை பகிரங்கப்படுத்த தகவல் உரிமை கமிஷன் கோரிக்கை

புதுடெல்லி,செப்.21:பாராளுமன்ற தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனைப் பெற்ற அப்சல் குருவின் மனு மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதிப்பதற்குரிய காரணத்தை பகிரங்கப்படுத்த டெல்லி லெஃப்டினண்ட் கவர்னரிடம் தகவல் உரிமை கமிஷன் கோரியுள்ளது.

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தகவல் உரிமை சேவகர் சேதன் கோத்தாரி அளித்த மனுவைத் தொடர்ந்து கமிஷன் கவர்னரிடம் கோரியுள்ளது.

டெல்லி அரசு, கருணை மனுவை பரிசீலிப்பதற்கு காலதாமதம் ஏற்படுவதன் காரணத்தை வெளியிட இயலாது என ஏற்கனவே அறிவித்திருந்தது. சட்டப்படி இது தகவல் அறியும் உரிமையின் கீழ் வராது என்பது டெல்லி அரசின் வாதம். ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகமும் இதுக்குறித்த விபரங்களை, பாதுகாப்பு காரணங்களால் வெளியிட இயலாது என அறிவித்திருந்தது.

டெல்லி அரசின் பதிலைத் தொடர்ந்துதான், மத்திய தகவல் உரிமை கமிஷனர் காரணங்களை வெளிப்படுத்தக்கோரி டெல்லி கவர்னரை கேட்டுள்ளார்.

லெஃப்டினண்ட் கவர்னரின் பதிலின் அடிப்படையில் கிடைக்கும் விபரங்களை கமிஷனர் மனு அளித்த சேதன் கோத்தாரிக்கு அளிப்பார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அஃப்ஸலின் கருணை மனு: காரணத்தை பகிரங்கப்படுத்த தகவல் உரிமை கமிஷன் கோரிக்கை"

கருத்துரையிடுக