லக்னோ,செப்.21:பாப்ரி மஸ்ஜித் நிலம் யாருக்கு சொந்தம் என்பதுத் தொடர்பான அலகாபாத் லக்னோ பெஞ்ச் தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டுமென்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடிச் செய்ததில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் அந்த பெஞ்ச் நீதிபதிகளில் ஒருவரான தரம் வீர் சர்மா.
சர்ச்சைக்குரிய விவகாரத்தில் சமரசத்திற்கான வழிகளை ஆராய்ந்திருக்கலாம் என சர்மா தனது குறிப்பில் எழுதியுள்ளார். வழக்கை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடிச் செய்தபொழுது இதர நீதிபதிகள் இருவர் தன்னிடம் விவாதிக்கவில்லை என சர்மா தெரிவிக்கிறார். இதனை எட்டு பக்கம் வரும் கருத்து வேறுபாட்டுக் குறிப்பில் தெரிவித்துள்ளார் அவர்.
நீதிபதிகளான சுதீர் அகர்வால், எஸ்.யு.கான் ஆகியோர் அந்த பெஞ்சின் இதர நீதிபதிகளாவர். வழக்கை ஒத்திவைக்கக் கோரும் மனுவை தாக்கல் செய்த திரிபாதிக்கு அபராதம் விதித்ததிலும் தனது அதிருப்தியை அக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார் சர்மா.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித் வழக்கில் சமரசம்: மனுவைத் தள்ளுபடிச் செய்ததில் நீதிபதிக்கு கருத்து வேறுபாடு"
கருத்துரையிடுக