17 செப்., 2010

அனைத்துக்கட்சி பிரதிநிதிக்குழு கஷ்மீருக்கு:ஊரடங்கு தொடர்கிறது

புதுடெல்லி/ஸ்ரீநகர்,செப்.17:கஷ்மீரில் கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடந்துவரும் சூழலில் அனைத்துக்கட்சி பிரதிநிதிக்குழுவினர் வருகிற திங்கள் கிழமை கஷ்மீர் செல்கின்றனர். இவர்கள் அங்குள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களையும், சமூகத்தின் பல்வேறு பிரிவினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவர். இவர்கள் 3 தினங்கள் கஷ்மீரில் தங்குவர்.

மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சல் தலைமையில்தான் இக்குழு கஷ்மீர் செல்கிறது. புதன்கிழமை பிரதமர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்தான் அனைத்துக் கட்சி பிரதிநிதிக்குழு கஷ்மீர் செல்ல முடிவானது.

அதேவேளையில் ஸ்ரீநகரிலும், இதர முக்கிய நகரங்களிலும் ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது. ஸோப்போரில் ஊரடங்கு உத்தரவை மீறிய மக்கள் கூட்டம் போலீசாருடன் மோதினர். கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி போலீசின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஜெ.கெ.எல்.எஃப் தலைவர் யாஸீன் மாலிக்கின் உறவினர் யாஸிர் ஹமீத் ஷேக் டெல்லியில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிட்சை பலனின்றி மரணமடைந்தார்.

புதன்கிழமை போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் மரணமடைந்த பூஞ்ச் மெந்தரில் ராணுவம் கொடி அணிவகுப்பை நடத்தியது. துப்பாக்கிச்சூட்டைக் குறித்து விசாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. சப்டிவிசன் போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஐந்து பாதுகாப்புப் படையினருக்கும் எதிராக வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் புனித திருக்குர்ஆன் அவமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துதான் பூஞ்சில் மக்கள் கொந்தளித்தனர். இதில்தான் பாதுகாப்புப் படையினர் அநியாயமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அனைத்துக்கட்சி பிரதிநிதிக்குழு கஷ்மீருக்கு:ஊரடங்கு தொடர்கிறது"

கருத்துரையிடுக