புதுடெல்லி,செப்.17:அயோத்தி பாப்ரி மஸ்ஜித் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வருகிற 24-ஆம் தேதி வெளியாகவிருக்கும் சூழலில் அமைதி காக்கவேண்டும் என மத்திய அரசு நாட்டுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை இதுத்தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இதனை மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகாசோனி அறிவித்துள்ளார்.
நீதிமன்றத் தீர்ப்பை அனைவரும் மதிக்கவேண்டும். அதேவேளையில், இந்த தீர்ப்பு நீதிமன்ற நடவடிக்கைகளில் ஒரு சுவடு மட்டும் தான் என்பதையும் புரிந்துக்கொள்ள வேண்டும். இனிமேலும் ஏதேனும் நீதிமன்ற தீர்ப்பு தேவையென்றால் சட்டரீதியான தீர்வு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித் வழக்கு:அமைதிகாக்க மத்திய அரசு வேண்டுகோள்"
கருத்துரையிடுக