17 செப்., 2010

பாப்ரி மஸ்ஜித்:இணக்கமான தீர்விற்கு வழி இல்லை என கல்யாண்சிங்

லக்னோ,செப்.17:அயோத்தியாவில் பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் இணக்கமான தீர்விற்கு வழி இல்லை எனவும், ஹிந்துக்களோ, முஸ்லிம்களோ அதனை அங்கீகரிக்கமாட்டார்கள் எனவும் உ.பி.மாநில முன்னாள் பா.ஜ.க முதல்வர் கல்யாண்சிங் தெரிவித்துள்ளார்.

அயோத்திக்கு புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசினார் அவர். மேலும் அவர் கூறியதாவது:"அயோத்தியில் கோயில் கட்டுவதற்கு ஹிந்துக்கள் உறுதிப்பூண்டுள்ளனர். இதற்கிடையே எதனைச் செய்தாலும், அது காலத்தை வீணடிப்பதாகும். அயோத்தியில் நான் சன்னியாசிகளை சந்திப்பேன்." என கல்யாண்சிங் தெரிவித்தார்.

இதற்கிடையே, இவ்வழக்கில் தீர்ப்பை ஒத்திவைப்பதற்கு எதிராக வழக்கின் கட்சிதாரரான ஹிந்துமாகாசபை அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்சில் மனு தாக்கல் செய்துள்ளது. தீர்ப்பை காலதாமதமாக்க வேண்டும் எனக்கோரும் இரண்டு மனுக்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. இந்த மாதம் 24 ஆம் தேதி பாப்ரி மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பு வெளியாகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித்:இணக்கமான தீர்விற்கு வழி இல்லை என கல்யாண்சிங்"

கருத்துரையிடுக