லண்டன்,செப்.17:கிறிஸ்தவ மத நம்பிக்கையாளர்களிடமிருந்து வலுவான எதிர்ப்பும், அதிருப்தியும் வெளிப்படும் என்ற தகவலுக்கிடையே போப் பெனடிக்ட் நான்காவது அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக பிரிட்டன் சென்றார்.
உலகம் முழுவதும் கத்தோலிக்க சர்ச்சுகளில் நடைபெற்ற பாலியல் கொடுமைகளுக்கெதிராக போதிய நடவடிக்கை எடுக்காத போப்பின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவரது பிரிட்டன் வருகையை கிறிஸ்தவர்கள் எதிர்க்கின்றனர்.
நேற்று எடின்பர்க்கில் விமானத்தில் வந்திறங்கினார் போப். 19-நூற்றாண்டில் ஆங்கிலேயே கர்டினலாக பணியாற்றிய ஜாண் ஹெண்ட்ரி நியூமேனை புனிதராக அறிவிப்பதற்குத்தான் போப் பிரிட்டன் வருகை தந்துள்ளார். தனது வருகை குறித்து பேட்டியளித்த போப்,தனது வருகை பிரிட்டனின் நல்லிணக்கத்திற்கு உதவும் எனவும்,பாலியல் விவகாரங்களில் சர்ச்சிடமிருந்து போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும், பிரச்சனையைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாததில் வருத்தம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளையில், போப்பின் வருகைக்கு எதிராக கண்டனப் பேரணிகள் நடத்தப்படும் என பல்வேறு அமைப்புகள் அறிவித்துள்ளன.
சிறுவர்கள் பாலியல் பலாத்கார விவகாரத்தில் போப்பின் கவனத்தை ஈர்க்க கண்டனப் போராட்டங்களால் இயலும் என அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஆனால், கண்டனப் போராட்டங்களை கவனத்தில் கொள்ளவேண்டாம் என கத்தோலிக்க சர்ச் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "விவாதங்களுக்கிடையே பிரிட்டன் சென்றார் போப்"
கருத்துரையிடுக