17 செப்., 2010

ஆஃப்கானில் நாளை பாராளுமன்றத் தேர்தல்

காபூல்,செப்.17:தாலிபான் போராளிகளின் அச்சுறுத்தலுக்கிடையே நாளை ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

அமெரிக்க தலைமையிலான அந்நியப் படைகளின் ஆக்கிரமிப்பிற்கு பிறகு ஆப்கானில் நடைபெறும் இரண்டாவது தேர்தலாகும் இது.

ஆஃப்கானிஸ்தான் பாராளுமன்றத்தின் 249 இடங்களுக்கு 2500க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஆஃப்கானிஸ்தான் நாட்டைச் சார்ந்தவர்கள் எவரும் வாக்களிக்கக் கூடாது என அழைப்புவிடுத்துள்ள தாலிபான், அந்நிய நாட்டவரின் அனைத்து முயற்சிகளையும் தோற்கடிக்க வேண்டும் எனவும் ஜிஹாதின் மூலம் நாட்டை அந்நியர்களின் கைகளிலிருந்து காப்பாற்றவேண்டும் எனவும் கோரியுள்ளது.

ஆனால், பாராளுமன்றத் தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என அதிபர் கர்ஸாய் அறிவித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களால் தென்கிழக்கு பகுதிகளில் 14 சதவீதம் வாக்குச்சாவடிகள் செயல்படத்துவங்கவில்லை.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆப்கானில் 1093 போராளித் தாக்குதல்கள் நடைபெற்றன. கடந்த மாதம் ஹெராத்தில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் 3 வேட்பாளர்களும், 5 தேர்தல் பிரச்சாரகர்களும் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே, ஆஃப்கான் முழுவதும் போலி கார்டுகள் வாக்காளர்கள் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் பெஷாவரில் அச்சடிக்கப்பட்ட கார்டுகள் ஆஃப்கானில் எளிதாக கிடைக்கிறது என்பதை அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. கடந்த ஒருமாதத்திற்கிடையே 15 லட்சம் கார்டுகளை தான் விற்றதாக அல்ஜசீரா தொலைக்காட்சியிடம் கூறுகிறார் ஒரு முகவர். போலி பதிவு கார்டுகள் விற்கும் ஏராளமான ஏஜன்சிகள் ஆப்கானில் செயல்பட்டுவருவதாக கூறப்படுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆஃப்கானில் நாளை பாராளுமன்றத் தேர்தல்"

கருத்துரையிடுக