ஜெருசலம்,செப்.9:ஃபலஸ்தீன் அதாரிட்டியுடன் நடைபெறும் நேரடியான சமாதானப் பேச்சுவார்த்தை வெற்றிப்பெறும் என உறுதியாக கூறவியலாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
தற்பொழுது நடைபெறுவது சில முயற்சிகளே! இதுத்தொடரும் என கூறவியலாது! யூதர்களின் புதுவருட கொண்டாட்டத்திற்கு சற்று முன்பு பதிவுச் செய்யப்பட்ட ஹீப்ரு மொழியிலான செய்தியில் நெதன்யாகு இதனைக் குறிப்பிடுகிறார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது:"பேச்சுவார்த்தையின் வெற்றிக்கு தடையாக நிறைய காரணங்கள் உண்டு. ஆனாலும், சமாதானத்திற்குத்தான் நாங்கள் முயற்சிச் செய்கிறோம். யூத நாட்டை அங்கீகரிப்பது, பாதுகாப்பு உள்ளிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் ஒப்பந்தம் உருவாகும். ஃபலஸ்தீனை நாங்கள் அங்கீகரிக்கும் பொழுது இஸ்ரேலை ஃபலஸ்தீனும் அங்கீகரிக்க வேண்டும்." இவ்வாறு நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "சமாதான பேச்சுவார்த்தை வெற்றிப் பெறுவதுக் குறித்து உறுதிக்கூறவியலாது - நெதன்யாகு"
கருத்துரையிடுக