9 செப்., 2010

ஈராக் ராணுவவீரன் இரண்டு அமெரிக்க ராணுவத்தினரை சுட்டுக் கொன்றார்

பாக்தாத்,செப்.9:ஈராக் தலைநகரான பாக்தாதிலிருந்து 210 கிலோமீட்டர் தொலைவிலிலுள்ள துஸ்கோரமாதோ என்ற ஊரில் ஈராக் ராணுவ வீரர் ஒருவர் இரண்டு அமெரிக்க ராணுவத்தினரை சுட்டுக் கொன்றுள்ளார். இதில் ஒன்பது அமெரிக்க ராணுவத்தினருக்கு காயம் ஏற்பட்டது.

ஈராக் ராணுவ தலைமையகத்திற்கு அமெரிக்க கமாண்டர் சென்றபொழுது இத்தாக்குதல் நடந்தது. இதுத்தொடர்பாக ஈராக் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈராக்-அமெரிக்க ராணுவத்தினரிடையே நடந்த விளையாட்டுப் போட்டியில் ஏற்பட்ட மோதலில் ஈராக் வீரர் துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையே பாக்தாதில் இரண்டு இடங்களில் நடைபெற்ற தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். 35 பேருக்கு காயம் ஏற்பட்டது. கிழக்கு பாக்தாதில் ஷேக் உமர் என்ற இடத்திற்கு அருகில் நடந்த குண்டுவெடிப்பில் இரண்டுபேர் கொல்லப்பட்டனர். 12 பேருக்கு காயம் ஏற்பட்டது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஈராக் ராணுவவீரன் இரண்டு அமெரிக்க ராணுவத்தினரை சுட்டுக் கொன்றார்"

கருத்துரையிடுக