9 செப்., 2010

பாப்ரி மஸ்ஜித்:தீர்ப்பு 24 ஆம் தேதி

லக்னோ,செப்.9:பாப்ரி மஸ்ஜித் அமைந்திருந்த நிலத்தின் உரிமைக் குறித்தும், வரலாற்று பின்னணியும் குறித்த வழக்குகளில் அலகபாத் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் வருகிற 24-ஆம் தேதி தீர்ப்பு வழங்கும்.

மூன்று விஷயங்கள் குறித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்:

1.மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தில் 1538 ஆம் ஆண்டிற்கு முன்பு கோயில் அங்கிருந்ததா?

2.நிலம் மற்றும் கட்டிடத்தின் உரிமைக் கோரும் பாப்ரி மஸ்ஜித் கமிட்டியின் 1961 ஆம் ஆண்டு சமர்ப்பித்த மனு காலாவதியான பிறகு சமர்ப்பிக்கப்பட்டதா?

3.முஸ்லிம்கள் சட்டத்திற்கு புறம்பாக நிலம் கைவசம் வைத்திருந்தனரா? ஆகியவையாகும்.

பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பாக 1950 முதல் 1989 வரை ஐந்து மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று பின்னர் வாபஸ் பெறப்பட்டது. இதர நான்கு வழக்கில்தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்.

வருகிற செப்.24-ஆம் தேதி 4 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்படும் என அவ்வழக்குகளின் வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு தடைவிதித்து கடந்த ஜூலை 26 ஆம் தேதி நீதிபதிகளான எஸ்.யு.கான், சுதீர் அகர்வால், டி.வி.சர்மா ஆகியோர் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

பாப்ரி மஸ்ஜித் இருந்த இடத்தில் ராம பூஜை நடத்த அனுமதி வழங்கவேண்டும். எனக்கோரி 1950 ஆம் ஆண்டில் கோபால்சிங் விசாரத் என்பவர் முதல் மனுவை சமர்ப்பித்தார். இதே ஆண்டில் தம் சந்திரதாஸ் என்பவர் இதேக் கோரிக்கையை வலியுறுத்தி மனுவை சமர்ப்பித்தார்.

விசாரத் மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார். ரீசிவரிடமிருந்து நிலத்தை கைமாற்ற வேண்டும் எனக்கோரி 1959 ஆம் ஆண்டில் நிர்மோஹி அகாரா வழக்குத் தொடர்ந்தார்.

நான்காவது வழக்கு 1961 ஆம் ஆண்டில் உ.பி மாநில சுன்னி செண்ட்ரல் வக்ஃப் போர்டு மனுவை சமர்ப்பித்தது. நிலத்தின் உரிமையை தங்களுக்கு மாற்றும் விதமாக தீர்ப்பு அளிக்கவேண்டும் என்று கோரிய மனு அது. ஆனால், பாப்ரி மஸ்ஜித் நிலத்தின் உரிமையைக்கோரி 1989 ஆம் ஆண்டு பக்வான் ஸ்ரீராம் லல்லா விராஜ்மான் என்பவரின் பெயரில் வழக்குத் தொடரப்பட்டது.

ஃபைஸாபாத் சிவில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இவ்வழக்குகள் 1989 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.

இவ்வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் ஆர்க்யோலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியாவின் அறிக்கையில், அயோத்தியில் கோயில் இருந்ததை குறிப்பிடும் தகவல்கள் உள்ளன. ஆனால், இந்த அறிக்கையில் பரஸ்பர எதிர்மறையான விபரங்கள் உள்ளதாக சுன்னி வக்ஃப் போர்டு நீதிமன்றத்தில் தெளிவுப்படுத்தியிருந்தது.

பாப்ரி மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பு வன்முறைக்கு காரணமாகுமா? என்ற கவலை எழுந்துள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித்:தீர்ப்பு 24 ஆம் தேதி"

கருத்துரையிடுக