9 செப்., 2010

மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தால் இராஜஸ்தானில் சிகிச்சையின்றி 57 நோயாளிகள் பலி

ஜெய்ப்பூர்,செப்.9:ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்களுக்கும், நோயாளிகளுடன் வந்திருந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கை கலப்பில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினார்கள். இதில் 60 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் காயம் அடைந்தனர்.

போலீசார் தடியடியை கண்டித்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் 3 நாட்களாக மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்கவில்லை. இதில் 57 பேர் உயிர் இழந்தனர்.

இது பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. மருத்துவர்களுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இதனால் பயந்து போன மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்று உடனடியாக வேலைக்கு திரும்பினார்கள்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தால் இராஜஸ்தானில் சிகிச்சையின்றி 57 நோயாளிகள் பலி"

கருத்துரையிடுக