டெல்அவீவ்,செப்.30:ஒன்பது யூத துயர்துடைப்பு பணியாளர்களைக் கொண்ட காஸ்ஸாவிற்கு வந்த கப்பலை இஸ்ரேலிய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இஸ்ரேலின் தடையை மீறியதாக குற்றஞ்சாட்டி அவர்கள் கைதுச்செய்யப்பட்டனர்.
எல்லா யூதர்களும் இஸ்ரேலின் தடையை ஆதரிக்கவில்லை என்பதை பிரகடனப்படுத்தத்தான் தாங்கள் காஸ்ஸாவிற்கு புறப்பட்டதாக ஐரீன் என்ற இஸ்ரேலிய முன்னாள் விமானி தெரிவித்தார்.
தாக்குதல் நடத்தவோ, தற்காப்பு நடவடிக்கையோ மேற்கொள்ளாமல்தான் ராணுவம் கப்பலுக்குள் நுழைந்ததாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது.
கப்பலை இஸ்ரேலிய துறைமுகமான அஷ்தோதில் சிறைவைக்கப்பட்டுள்ளது. கப்பலிருந்த மருந்து, விளையாட்டுப் பொருட்கள், தண்ணீரை சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் ஆகியன காஸ்ஸாவில் ஒப்படைக்கப்படும் என கருதப்படுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "காஸ்ஸாவிற்கு வந்த நிவாரணக்கப்பலை தடுத்து நிறுத்தியது இஸ்ரேல் ராணுவம்"
கருத்துரையிடுக