30 செப்., 2010

ஃபலஸ்தீன்:மீண்டும் தோல்வியை தழுவிய பேச்சுவார்த்தை

ஃபலஸ்தீன்-இஸ்ரேலுக்கிடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியைத் தழுவியதாக செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவின் சி.ஐ.ஏ மற்றும் இஸ்ரேலின் மொசாதின் பாதுகாப்பில் வாழ்க்கையை ஓட்டும் ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸும், வலதுசாரி தீவிரவாதியான பெஞ்சமின் நெதன்யாகுவும் நடத்தும் பேச்சுவார்த்தை வெறும் ஓர் நாடகம்தான் என்பதை இதனைக் குறித்து அறிந்தவர்கள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

ஃபலஸ்தீனர்களின் எந்தவொரு உரிமையையும் அங்கீகரிக்கும் ஆட்சியாளர்கள் அல்லர் இஸ்ரேலை ஆள்வது. 1967 ஆம் ஆண்டு இஸ்ரேல் கைப்பற்றிய ஃபலஸ்தீன் நிலங்களலல்லாத பிரதேசங்களில் கூட சர்வதேச சட்டங்களையும், மரியாதைகளையும் காற்றில் பறத்திவிட்டு குடியேற்ற கட்டுமானப் பணிகளை துவக்குவதுதான் நெதன்யாகுவின் திட்டம்.

கடந்த திங்கள் கிழமை(27/09/10) வரை ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீன் பிரதேசங்களில் கட்டுமானப் பணிகளை நிறுத்திவைத்திருந்த இஸ்ரேல் அவற்றை மீண்டும் துவக்கியுள்ளது.

அமெரிக்காவிலிருந்து வரும் தீவிரவாத சிந்தனைக் கொண்ட யூதர்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுப்பது மட்டுமல்ல அவர்களுக்கு ஆயுதங்களை அணிவிக்கவும் செய்கிறது.

ஆட்சிக் கட்டிலில் அமரும்பொழுது சுதந்திர ஃபலஸ்தீன் நாடு உருவாக்குவதைக் குறித்து வாய்கிழிய பேசிய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, தற்பொழுது முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் அதேக் கொள்கைகளைத்தான் பின்பற்றுகிறார்.

இஸ்ரேலுக்கு நிர்பந்தத்தை கொடுக்கும் துணிச்சல் ஒபாமாவுக்கோ, மனித உரிமைகளைக் குறித்து கூக்குரலிடும் மேற்கத்திய நாடுகளுக்கோ இல்லை என்பதுதான் உண்மை.

ஃபலஸ்தீன் மக்களின் உண்மையான பிரதிநிதிகளான ஹமாஸை பங்கேற்கச் செய்யாமல் நடைபெறும் பேச்சுவார்த்தை காலத்தை விரயமாக்கும் அமெரிக்க-இஸ்ரேல் தந்திரமாகும்.

ஜனநாயகரீதியாக ஆட்சியை பிடித்த ஹமாஸை பலம் பிரயோகித்து வெளியேற்ற முன்பு அப்பாஸும், அவருடைய கூட்டாளிகளும் அமெரிக்கா-இஸ்ரேல் உதவியுடன் ரகசிய முயற்சியை மேற்கொண்டனர். இதனைப் புரிந்துக்கொண்ட ஹமாஸ், காஸ்ஸாவிலிருந்து பி.எல்.ஓ தலைவர்களில் ஒருவரும், சி.ஐ.ஏ ஏஜண்டுமான அஹ்மத் தெஹ்லானையும், அவருடைய கூட்டாளிகளையும் வெளியேற்றியது.

இஸ்ரேல் காஸ்ஸாவில் ஏற்படுத்திய தடையை தோற்கடித்த ஹமாஸ், மேற்குகரையிலும் தனது செல்வாக்கை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாகவே ஃபலஸ்தீன் அதிபர் அப்பாஸ் பேச்சுவார்த்தைக்காக வாஷிங்டன் சென்றார். கேமராக்களுக்கு முன்பு நின்று போஸ் கொடுத்ததைத் தவிர வேறு எந்த பயனும் இதனால் ஏற்படவில்லை.

தினந்தோறும் சட்டங்களை மீறிவரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பைத் தடுக்கும் சக்தி அப்பாஸிற்கு இல்லை என்பது மீண்டும் தெளிவாகியுள்ளது பேச்சுவார்த்தை உணர்த்தும் பாடமாகும். இல்லாவிட்டாலும், ஏகாதிபத்திய, எதேச்சதிகார சக்திகளின் பொம்மை ஆட்சியாளர்கள் வரலாற்றில் என்ன மாற்றத்தை ஏற்படுத்திவிட்டார்களாம்?

விமர்சகன்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஃபலஸ்தீன்:மீண்டும் தோல்வியை தழுவிய பேச்சுவார்த்தை"

கருத்துரையிடுக