30 செப்., 2010

அமைதியை தேடி உ.பி மாநில மக்கள்

லக்னோ,செப்.30:பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரவிருக்கவே சாந்தியையும், சமாதானத்தையும் கைவிட்டுவிடக் கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார்கள் உ.பி. மாநில மக்கள்.

பொறுமைதான் மனித குணம் என்றும், அது சோதனைக்குள்ளாக்கப்படும் நாள்தான் இன்று எனவும் முஸ்லிம்-ஹிந்து மதத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் மலாங் பாவாவின் தர்காவை புதுப்பிக்கும் வேளையில் சிவனின் விக்கிரஹம் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில் சிறிய அளவிலான பிரச்சனை உருவானாலும், ஊர்வாசிகள் பஞ்சாயத்து கூடி அதனை சமரசமாக பரிகாரம் கண்டனர். அவ்விடத்தில் தர்காவும், கோயிலும் ஒருங்கே நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரண்டு சமூக மக்களும் சமாதானத்தை கடைப்பிடிக்கவேண்டும் என இரு சமுதாய தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தனர். பொறுமைதான் மனித குலத்தின் மதிப்பீடு என்றும், இது சோதனைக்குள்ளாக்கப்படும் தினம் தான் இன்று எனவும் பிரபல ஷியா அறிஞரும் அகில இந்தியா முஸ்லிம் தனியார் சட்டவாரிய உறுப்பினருமான கல்பே ஜவாத் கூறியுள்ளார்.

1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6, குஜராத் இனப்படுகொலை போன்ற துயரச் சம்பவங்கள் இனிமேலும் நடக்கக் கூடாது எனவும், இரத்தக் களரி உருவாகிவிடக் கூடாது எனவும் ஈத்காஹ் நாஈப் இமாம் காலித் ரஷீத் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பை காத்திருப்பதாகவும், தீர்ப்பு என்னவாயினும் தெய்வத்தின் விருப்பப்படி சமாதானத்தை விரும்புவதாகவும் நிர்மோஹி அகாராவின் மஹந்த் பாஸ்கர்தாஸ் கூறினார்.

இரட்டை கோயில் நகரங்களான ஃபைஸாபாத்தும்,அயோத்தியாவும் அமைதியாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அமைதியை தேடி உ.பி மாநில மக்கள்"

கருத்துரையிடுக