12 செப்., 2010

பயங்கரவாதம்:அமெரிக்க குடிமக்களுக்கு பீதியில்லை என அறிக்கை

வாஷிங்டன்,செப்.12:அமெரிக்காவில் குடிமக்களை நிம்மதியை இழக்கச் செய்வது பயங்கரவாதம் அல்ல என ஆய்வறிக்கையொன்று கூறுகிறது.

நேற்று முன் தினம் வெளியிடப்பட்ட இவ்வறிக்கையில் ஒரு சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே தீவிரவாதம் தேசம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை எனக்கூறியதாக கூறப்படுகிறது.

2001 ஆம் ஆண்டு செப்.11 தாக்குதலுக்கு பிறகு பயங்கரவாதம் முக்கியப் பிரச்சனையாக இருந்தது என 46 சதவீதம் பேர் தெரிவிக்கின்றனர்.

உலக வர்த்தகமையமும், ராணுவ தலைமையகமான பெண்டகனும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதற்கு நான்கு தினங்கள் முன் நடத்தப்பட்ட சர்வேயில் 200 ல் ஒருவர் மட்டுமே தீவிரவாதத்தை ஒரு பிரச்சனையாக கருதினர்.

ஈராக் போர், பொருளாதார நெருக்கடி, பணி இழப்பு ஆகியவைதான் அமெரிக்கர்களின் முன்னால் உள்ள முக்கியப் பிரச்சனைகள் என ஆய்வறிக்கை கூறுகிறது.

2003 முதல் ஈராக்கில் அமெரிக்கா நடத்திய ஆக்கிரமிப்பும், 2008 ஆம் ஆண்டு முதல் தேசம் சந்திக்கும் பொருளாதார நெருக்கடியும் அமெரிக்கா சந்திக்கும் முக்கியப் பிரச்சனைகள் என கடந்த ஆகஸ்டில் நடத்திய சர்வேயில் பெரும்பாலான நபர்கள் சுட்டிக்காட்டினர். ஆனால் தீவிரவாதம் நிச்சயமாக முக்கியத்துவம் அளிக்கவேண்டிய பிரச்சனைதான் என சர்வேயில் பங்கேற்ற அனைவரும் தெரிவித்தனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பயங்கரவாதம்:அமெரிக்க குடிமக்களுக்கு பீதியில்லை என அறிக்கை"

கருத்துரையிடுக