காபூல்,செப்.:அரசுக்கெதிரான போரிலிருந்து விலகி தாலிபான் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராகவேண்டும் என ஆஃப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்ஸாய் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிலிருக்கும் ஒன்றரை லட்சம் அமெரிக்க-நேட்டோ ராணுவத்தினர் பாக்.எல்லையில் தாலிபான் மையங்களை லட்சியமாக்கி செயல்படவேண்டும் எனவும் கர்ஸாய் கடந்த வெள்ளிக்கிழமை ஈத் பெருநாள் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிராமங்களைவிட அமெரிக்க ராணுவத்தினர் கவன செலுத்தவேண்டியது பாகிஸ்தான் எல்லையாகும். தாலிபானின் உயர்த்தலைவர் முல்லா முஹம்மது உமர் பேச்சுவார்த்தைக்கு தயாராவார் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் கர்ஸாய் கூறுகிறார்.
தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கமிட்டி உருவாக்கப்படும் என கடந்தவாரம் கர்ஸாய் அறிவித்திருந்தார். ஒன்பது வருடமாக நீண்ட போருக்கு பிறகும் தாலிபான் வலுப்பெற்றுவரும் சூழலில்தான் கர்ஸாய் பேச்சுவார்த்தைக்கு தயாராகியுள்ளார்.
தாலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கமிட்டி உறுப்பினர்களை இவ்வாரத்தில் தீர்மானிக்கப்படும். பழங்குடி, மத தலைவர்கள் கலந்துக்கொண்ட கடந்த ஜூனில் நடந்த சமாதான மாநாட்டில்தான் தாலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என முதன்முதலாக கர்ஸாய் அறிவித்தார்.
ஐம்பது உறுப்பினர்கள் கமிட்டியில் உட்படுத்தப்படுவர் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
அந்நிய ராணுவம் ஆப்கானிலிருந்து வெளியேறாமல் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை என தாலிபான் அறிவித்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "தாலிபான் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராகவேண்டும் - கர்ஸாய்"
கருத்துரையிடுக