லண்டன்,செப்.6:பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சம்பந்தப்பட்டுள்ள ஸ்பாட் பிக்ஸிங் ஊழல் தொடர்பான மேலும் பல தகவல்களை விரைவில் வெளியிடப் போவதாக இங்கிலாந்துப் பத்திரிக்கை நியூஸ்ஆப் தி வேர்ல்ட். இதனால் இந்த விவகாரம் மேலும் பெரிதாக வெடிக்கவுள்ளது.
ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகி ஐசிசியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் கேப்டன் சல்மான் பட், பந்து வீச்சாளர்கள் முகம்மது ஆசிப், முகம்மது ஆமிர் ஆகியோர் தொடர்பான மேலும் பல தகவல்களை விரைவில் வெளியிடப் போவதாக நியூஸ் ஆப் தி வேர்ல்ட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
இந்தப் பத்திரிக்கை நடத்திய 'ஸ்டிங்' ஆபரேஷனில்தான் பாகிஸ்தான் வீரர்கள் சிக்கினர் என்பது நினைவிருக்கலாம்.
இந்த பத்திரிக்கை மேலும் என்ன தகவல்களை வெளிடப்போகிறது என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது.
இதற்கிடையே,மூன்று வீரர்களையும் விசாரித்த ஸ்காட்லாந்து யார்டு இதுவரை யார் மீதும் வழக்குப் பதிவு செய்யவில்லை.

0 கருத்துகள்: on "கிரிக்கெட்:'ஸ்பாட் பிக்ஸிங்' சூதாட்ட ஆதாரங்களை வெளியிடுகிறது இங்கிலாந்து பத்திரிக்கை"
கருத்துரையிடுக