6 செப்., 2010

உலகின் மிகப் பெரிய வெளிநாட்டுப் பணக்காரர்கள் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்த வளைகுடா நாடுகள்

துபாய்,செப்.6:ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ளனர் என்று கணக்கடுப்பு ஒன்று தெரிவித்துள்ளது. அங்குள்ள வெளிநாட்டவர்கள் வரி இன்றி, சொகுசான வாழ்க்கை வாழ்கின்றனர்.

உலகின் மிகப் பெரிய வெளிநாட்டுப் பணக்காரர்கள் நிறைந்த நாடு குறித்த ஒரு கணக்கெடுப்பை ஹெச்.எஸ்.பி.சி. நடத்தியது. அதில் ரஷ்யா முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2வது இடம் பஹ்ரைனுக்கும், 3வது இடம் சவூதி அரேபியாவுக்கும் கிடைத்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது.

கடந்த முறை ஐந்தாவது இடத்தில் இருந்து வந்த எமிரேட்ஸ், ஒரு படி முன்னுக்கு வந்து நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது.

இதில் வருவாய், செலவு, சேமிப்பு, முதலீடு, பொருளாதாரத்தின் தாக்கம் ஆகியவற்றை 25 நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்களுடன் ஒப்பிட்டப்பட்டது.

அந்த அடிப்படையில், சொகுசாக வாழ உகந்த நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

உலகின் பிற பகுதிகளில் வாழும் வெழிநாட்டவர்களை விட இங்கு வாழ்பவர்கள் அதிகமான கார்களை வைத்துள்ளனர். இங்கு வசிப்பவர்கள் விடுமுறைகள், நிறைய சொத்து, வீட்டு வேலைக்கு ஆள் என சுகபோகமாக வாழ்கின்றனர். வரி இல்லாதது தான் இவர்களுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய ஊக்கமாக உள்ளது என்று அந்த கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டைச் சேர்ந்தவர்களை விட 94 சதவிகித வெளிநாட்டவர்கள் குறைந்த வரியைத் தான் செலுத்தியுள்ளனர்.

வருவாயை மதிப்பீடு செய்ததில் வெளிநாட்டவர்கள் தாங்கள் சார்ந்த நாட்டை விட அதிக அளவில் வரி செலுத்த வேண்டியிருந்தது. அதிகமாக சம்பாதிப்பது மட்டுமின்றி நிறைய சேமிக்கவும் செய்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது. கணக்கெடுப்பில் பங்குபெற்றவர்களில் 79 சதவிகிதத்தினர் தாங்கள் வெளிநாட்டவர்கள் ஆன பிறகே அதிகம் சேமித்ததாகக் கூறுகின்றனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "உலகின் மிகப் பெரிய வெளிநாட்டுப் பணக்காரர்கள் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்த வளைகுடா நாடுகள்"

கருத்துரையிடுக