ஸ்ரீநகர்,செப்.28:கஷ்மீரில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்தில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சரவையின் துணைக்கமிட்டி அறிவித்த எட்டு அம்ச திட்டத்தை நிராகரித்துவிட்டார் ஹூர்ரியத் மிதவாத பிரிவு தலைவர் மீர்வாய்ஸ் ஃபாரூக்.
இத்திட்டம் நிராசையை ஏற்படுத்துவதாகவும், கஷ்மீர் மக்களின் உண்மையான விருப்பங்கள் அதில் பிரதிபலிக்கவில்லை எனவும் மீர்வாய்ஸ் ஃபாரூக் தெரிவித்துள்ளார்.
எதார்த்தமான சூழலை அடையாளம் கண்டுக்கொண்டதல்ல மத்திய அரசின் ஃபார்முலா என்றும், அது மக்களின் கண்ணில் மண்ணைத் தூவுவதாகும் எனவும், இனியும் போராட்டம் தொடரும் என்றும் தெஹ்ரீக்-இ-ஹுர்ரியத்தின் தலைவர் செய்யத் அலிஷா கிலானி நேற்று முன் தினம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்துதான் ஹூர்ரியத்தின் மிதவாத தலைவராக கருதப்படும் மீர்வாய்ஸ் ஃபாரூக், மத்திய அரசின் ஃபார்முலா கஷ்மீர் மக்களுக்கு தேவையானது அல்ல எனக் கூறியுள்ளார்.
மத்திய அரசின் ஃபார்முலா போருக்கு தயாராக நிற்கும் மாநில அரசிற்கு வேண்டுமானால் ஆசுவாசம் அளிக்கலாம். அடிப்படையான பிரச்சனைகளை கண்டுக்கொள்ளாமை, மக்களின் உண்மையான பிரச்சனைகளை புரிந்துக்கொள்ளாமை, மத்திய அரசின் கையாலாகாததனம் ஆகியவற்றை இது வெளிப்படுத்துவதாகவும் மீர்வாய்ஸ் ஃபாரூக்கின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கஷ்மீரிகளும், இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து பயன்தரத்தக்க பேச்சுவார்த்தையை தொடங்கவேண்டும் என்ற கோரிக்கையையும் மீர்வாய்ஸ் ஃபாரூக் முன்வைத்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "மத்திய அரசின் எட்டு அம்ச திட்டத்தை மீர்வாய்ஸ் ஃபாரூக்கும் நிராகரித்தார்"
கருத்துரையிடுக