கொச்சி,செப்.18:பேராசிரியர் டி.ஜெ.ஜோசஃபை தாக்கிய வழக்கில் ஒன்பதாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஆலுவா அல் அமீன் பல் மருத்துவமனை மருத்துவர் ரெனீஃபிற்கு கேரள உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
பேராசிரியரை தாக்கிய வழக்கில் குற்றவாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்கியதாகவும், அவர்கள் தப்பிக்க உதவியதாகவும் டாக்டர் ரெனீஃபின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
டாக்டருக்கெதிரான வழக்கில் சுமத்தப்பட்ட பிரிவுகளில் ஜாமீன் வழங்க அனுமதி உண்டு என நீதிமன்றம் கூறியது. அனைத்து புதன் கிழமைகளிலும் மூவாற்றுப்புழா எஸ்.பி.அலுவலகத்தில் ஆஜராக வேண்டும். சாட்சிகளை கலைக்க முயற்சிக்கக் கூடாது, அமைப்புகளின் தீவிரவாதத் தொடர்புக் குறித்த விசாரணை முடியும்வரை பாப்புலர்ஃப்ரண்ட்,எஸ்.டி.பி.ஐ ஆகிய அமைப்புகளுடன் ஒத்துழைக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "கேரளா:டாக்டர் ரெனீஃபிற்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது"
கருத்துரையிடுக