18 செப்., 2010

இஸ்ரேல்-ஃபலஸ்தீன் சமாதான பேச்சுவார்த்தை காலத்தை விரயமாக்கும் செயல் - அரப்லீக்

தோஹா,செப்.18:இஸ்ரேல் குடியேற்ற நிர்மாணத்தை நிறுத்தாமல் ஃபலஸ்தீன் அதாரிட்டியுடன் நடத்தும் பேச்சுவார்த்தை காலத்தை விரயமாக்கும் செயல் என அரப் லீக்கின் பொதுச்செயலாளர் அம்ர் மூஸா தெரிவித்துள்ளார்.

குடியேற்ற நிர்மாணத்தை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால் பேச்சுவார்த்தையை தொடரக் கூடாது எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆக்கிரமிப்பு நடக்கும்பொழுது பேச்சுவார்த்தை நடத்துவதில் பயனில்லை. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும், ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸும் எகிப்தில் நடத்திய இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த சூழலில்தான் அம்ர் மூஸா இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஆக்கிரமிப்பு ஃபலஸ்தீனில் இஸ்ரேல் குடியேற்ற நிர்மாணத்தை நிறுத்தவேண்டும் என நேற்று முன் தினமும் கோரியிருந்தது. குடியேற்ற நிர்மாணத்தை தொடர்ந்து நிறைவேற்றுவதுதான் இஸ்ரேலின் முடிவு. குடியேற்றத்தை பகுதியளவில் குறைத்ததன் கால அவகாசம் இந்தமாதம் 30 ஆம் தேதி முடிவுறும். இஸ்ரேல் இந்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் இஸ்ரேலுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

சர்வதேச சட்டங்களை மீறும் செயல்தான் இஸ்ரேலின் குடியேற்ற நிர்மாணம் என ஐரோப்பியன் யூனியன் நேற்று முன்தினம் கூறியிருந்தது. மொரட்டோரியம் கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என்ற ஐரோப்பியன் யூனியனின் கோரிக்கையை இஸ்ரேல் நிராகரித்துள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இஸ்ரேல்-ஃபலஸ்தீன் சமாதான பேச்சுவார்த்தை காலத்தை விரயமாக்கும் செயல் - அரப்லீக்"

கருத்துரையிடுக