20 செப்., 2010

சமூக சேவை அமைப்பின் நிர்வாகிகள் மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றஞ்சுமத்தியது

ரியாத்,செப்.20:சவூதி தலைநகரான ரியாதை மையமாகக் கொண்டு செயல்படும் ஜீவகாருண்ய அமைப்பான அல் ஹரமைன் ஃபவுண்டேசனின் இரண்டு நிர்வாகிகள் மீது வரி ஏய்ப்பு மற்றும் சதித்திட்டம் குற்றத்தை சுமத்தியுள்ளது அமெரிக்க நீதிமன்றம்.

அமைப்பின் ஸ்தாபகர் பீட் ஸைதா, உதவி இயக்குநர் சுலைமான் அல்பூத்தி ஆகியோர் மீதுதான் நீதிமன்றம் குற்றஞ்சுமத்தியுள்ளது.

அதேவேளையில், செப்.11 தாக்குதலுக்கு நிதியுதவி அளித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் நியூயார்க் நீதிமன்றம் அல்பூத்தியையும் அல் ஹரமைன் ஃபவுண்டேசனின் இதர நிர்வாகிகளையும் குற்றமற்றவர்களாக விடுவித்தது.

இஸ்லாமியோ ஃபோபியா அமெரிக்காவில் எந்த அளவுக்கு அதிகரித்து வருகிறது என்பதன் நிரூபணம்தான் இந்த தீர்ப்பு என அல்பூத்தியின் வழக்கறிஞர் தோமஸ் ஹெச்.நீல்சன் தெரிவித்தார்.

தீவிரவாதத்தை ஆதரிப்பதாக குற்றஞ்சாட்டி அமெரிக்க அல்ஹரமைன் ஃபவுண்டேசனின் செயல்பாட்டை 2001 இல் நிறுத்திவைத்திருந்தது. சவூதியைச்சார்ந்த அல்பூத்தி ஈரான் வம்சாவழியைச் சார்ந்த அமெரிக்கரான நண்பர் பீட் ஸைதுடன் இணைந்து அமெரிக்காவின் ஓரிகோனில் அல்ஹரமைன் ஃபவுண்டேசனின் கிளையைத் துவக்கினார்.

ரியாத் நகராட்சி சுற்றுச்சூழல் துறைத்தலைவராகவும் அல்பூத்தி செயல்பட்டு வருகிறார். ஒன்றரை லட்சம் டாலர் கள்ளக் கடத்தலுக்காக செச்னியாவில் முஸ்லிம் போராளிகளுக்கு ஸைதா அளித்தார் என்பது அரசுத்தரப்பு குற்றச்சாட்டு. வரி ஏய்ப்பு நடத்தியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

தீர்ப்பிற்கெதிராக அப்பீல் செய்யப்போவதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சமூக சேவை அமைப்பின் நிர்வாகிகள் மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றஞ்சுமத்தியது"

கருத்துரையிடுக