20 செப்., 2010

ஆப்கானிஸ்தான் தேர்தல்:வாக்குப்பதிவு 40 சதவீதத்திற்கும் கீழே

காபூல்,செப்.20:ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு 40 சதவீதத்திற்கும் குறைவாக இருந்ததாக ஆரம்பக்கட்ட மதிப்பீடு கூறுகிறது.

கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வாக்குப்பதிவு 50 சதவீதமாகும். 11.4 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட ஆப்கானில் வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை 3.6 லட்சமாகும்.

இத்தேர்தலில் பரவலாக போலி வாக்காளர் அட்டைகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. தாலிபானின் கடும் எதிர்ப்பிற்கிடையேதான் வாக்குப்பதிவு நடைபெற்றது. 33க்கும் மேற்பட்ட தாக்குதல்களில் 11 சிவிலியன்களும், 3 போலீஸ் அதிகாரிகளும் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகாரிகளின் தலையீடு, கள்ள வாக்கு, அடையாள அட்டைகளை முறைகேடாக பயன்படுத்துதல், வாக்குச்சீட்டுகளின் குறைவு உள்ளிட்ட ஏராளமான புகார்கள் கிடைத்ததாக தேர்தல் கமிஷன் கூறுகிறது.

போலி அடையாள அட்டைகளுடன் வந்த வாக்காளர்களை வாக்குப்பதிவுச் செய்ய அனுமதித்ததாக தேர்தலை கண்காணித்த ஃப்ரீ அண்ட் ஃபயர் எலக்‌ஷன் ஃபவுண்டேசன் ஆஃப் ஆப்கானிஸ்தான் என்ற அமைப்பு பணியாளர்கள் கூறினர்.

பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டது உள்பட ஏராளமான போலி அடையாள அட்டைகள் ஆப்கானில் புழங்கியதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

பல இடங்களிலும் பெண் தேர்தல் அதிகாரிகள் இல்லை. பெண் வாக்காளர்களின் கையில் ஏராளமான அடையாள அட்டைகள் இருந்தன. பர்தா அணிந்த இவர்களை சோதிக்க எவ்வித வசதியும் செய்யப்படவில்லை. என ஃபரீ அண்ட் ஃபயர் எலக்‌ஷன் ஃபவுண்டேசன் அமைப்பு கூறுகிறது.

தாலிபான் மிரட்டல் மட்டும் வாக்குப்பதிவு குறைய காரணமல்ல என ஐ.நாவின் முன்னாள் ஆப்கன் தூதர் பீட்டர் கால்ப்ரய்த் சுட்டிக் காட்டினார். தங்களுடைய வாக்குகளைக் கொண்டு எவ்வித பயனுமில்லை. அதிகாரத்திலிருப்பவர்கள் தேர்தலில் முறைகேடுகளை நடத்துவார்கள் என்பதை அறிந்த பலரும் வாக்களிக்க வரவில்லை என அவர் கூறுகிறார்.

அதேவேளையில், தேர்தல் புறக்கணிப்பு அழைப்பு மற்றும் அச்சுறுத்தலை புறக்கணித்து வாக்களிக்க வந்த ஆப்கான் வாக்காளர்களை நேட்டோவும், ஐ.நாவும் நன்றி தெரிவித்துள்ளன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆப்கானிஸ்தான் தேர்தல்:வாக்குப்பதிவு 40 சதவீதத்திற்கும் கீழே"

கருத்துரையிடுக