20 செப்., 2010

பாக்தாதில் இரட்டைக குண்டுவெடிப்பு: 31 பேர் மரணம்

பாக்தாத்,செப்.20:ஈராக் தலைநகரான பாக்தாத்தில் நடந்த சக்தி மிகுந்த குண்டுவெடிப்பில் 31 பேர் கொல்லப்பட்டனர். வடக்கு பாக்தாதில் ஏதென் சந்திப்பிலும், மன்சூர் மாவட்டத்திலும் ஏறத்தாழ ஒரே நேரத்தில் கார் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.

எழுபதிற்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மன்சூர் மாவட்டத்தில் மொபைல் ஃபோன் அலுவலகம் முன்பு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிக்கு அருகில் ஏராளமான ரெஸ்ட்ராண்டுகளும், செக்போஸ்டுகளும் உள்ளன. ஏதன் ஜங்சனில் தேசிய பாதுகாப்பு அலுவலகத்திற்கு அருகில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

சில மாதங்கள் இடைவேளைக்குப் பிறகு ஈராக்கில் குண்டுவெடிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஈராக் ராணுவத்தினர் மற்றும் போலீசாரை குறிவைத்துதான் பெரும்பாலான தாக்குதல்கள் நடக்கின்றன.

2008 ஆம் ஆண்டிற்கு பிறகு ஈராக்கில் அதிகம் பேர் கொல்லப்பட்டது ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலாகும். கடந்த மார்ச் மாதம் நடந்த ஈராக் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் ஸ்திரமற்றத்தன்மையும் குண்டுவெடிப்புகள் அதிகரிக்க காரணம் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, நேற்று காலையில் அதி பாதுகாப்பு மிகுந்த க்ரீன்ஸோனின் மீது ராக்கெட் தாக்குதல் நடைபெற்றது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாக்தாதில் இரட்டைக குண்டுவெடிப்பு: 31 பேர் மரணம்"

கருத்துரையிடுக