காமன் வெல்த் போட்டிகள் துவங்க சில நாட்களே மீதமுள்ள சூழலில் டெல்லியில் தைவான் நாட்டைச் சார்ந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை செலவிட்டு சர்வதேச அளவில்
நடைபெறவிருக்கும் மாபெரும் விளையாட்டு கோலாகலத்தை பீதியுன் முள் முனையில் நிற்கவைக்க அப்போட்டிகளை நடைபெறவிடாமல் தடுப்பதற்கும் முயல்பவர்களை தேசம் கடுமையாக எதிர்க்கவேண்டும்.
ஏன் இந்த தாக்குதல் நடைபெற்றது? யார் இதன் பின்னணியில் உள்ளார்கள்? என்பதுக் குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.
தற்பொழுது நடைபெறும் போலீஸ் விசாரணையில் உண்மை விரைவில் வெளியாகும் என நம்புவோம்.
இச்சம்பவத்தின் பின்னணியில் இந்தியன் முஜாஹிதீன் போன்ற சில அமைப்புகள் என வழக்கம்போல் பிரச்சாரத்தை ஆரம்பித்தன சில ஊடகங்கள். ஆனால் போலீஸ் அதிகாரிகள் இத்தகைய பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கவில்லை என்பது ஆசுவாசமான செய்தியாகும்.
இன்றுவரையிலான அனுபவம் என்னவெனில், தேசத்தின் எப்பகுதியிலாவது குண்டுவெடிப்புகளோ, தாக்குதல்களோ நிகழும் பொழுது முஸ்லிம் பெயரைக்கொண்ட நபர்கள் மீது குற்றத்தை தலையில் கட்டுவதுதான் நடந்தேறி வருகிறது. இது பலகாலமாக நடந்துவரும் சடங்காகும். அதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக, தேசத்தில் நடந்த நாசவேலைகளுக்கு பின்னணியில் ஹிந்துத்துவா பாசிச சக்திகள் உள்ளன என்ற புலனாய்வுகள்
வெளியாயின.
காவி பயங்கரவாதம் தேசத்திற்கு அச்சுறுத்தலானது எனவும் அதுக்குறித்து எச்சரிக்கையுடனிருக்க வேண்டும் என போலீஸ் அதிகாரிகளின் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியது உண்மையை உணர்ந்துக்கொண்டதன் விளைவே.
டெல்லியில் நடந்த இந்த நிகழ்வையொட்டி வழக்கமான பாணியை போலீசார் கைவிட்டதும் இதனடிப்படையில் இருக்கலாம். அக்கிரமங்களை இரும்புக்கரம் கொண்டு தடுப்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், சட்டத்தை தங்களது அரசியல், மதவெறி லட்சியங்களுக்காக வளைக்க நினைக்கும் சக்திகள் இன்று இந்தியாவின் பல துறைகளிலும் ஊடுருவியுள்ளன. அவர்களின் செயல்திட்டங்கள் இனிமேலும் நிறைவேறாது என நம்புவோம்.
ஆகையால், டெல்லியில் நடந்த துப்பாக்கிச்சூடுத் தொடர்பான வழக்கு விசாரணை நீதியான முறையில் நடைபெறும் என நம்புவோம்.
விமர்சகன்

0 கருத்துகள்: on "டெல்லி துப்பாக்கிச்சூடு"
கருத்துரையிடுக