கொல்லம்,செப்.2:கேரள பி.டி.பி கட்சியின் தலைவர் அப்துல் நாஸர் மஃதனி கைது செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக பெங்களூர் உதவி போலீஸ் கமிஷனருக்கு கொல்லம் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
பெங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாக கடந்த மாதம் 17-ம் தேதி கொல்லத்தில் கர்நாடக போலீஸாரால் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாஸர் மஃதனி கைது செய்யப்பட்டார். அவர் இப்போது பெங்களூர் சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ளார்.
இந்த நிலையில் மஃதனியின் சகோதரர் அப்துல் சலாம், கொல்லம் தலைமைக் குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: "பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக மஃதனியை கர்நாடக போலீஸார் கைது செய்தனர். ஆனால் சட்டப்படி அவர் கைது செய்யப்படவில்லை. அவர் கைது செய்யப்பட்டவுடன் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.
ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கு குற்றம் சாட்டப்பட்டவரை அழைத்துச் செல்லும்போது சம்பந்தப்பட்ட மாநிலத்தின் அனுமதியைப் பெறுவது அவசியம். ஆனால் இந்த வழக்கில் அது செய்யப்படவில்லை.
எனவே சட்டவிதிகளின்படி அவர் கைது செய்யப்பட்டு வாரண்ட் பெற்று அழைத்துச் செல்லப்படவில்லை. போலீஸாரும் சட்டவிதிகளைப் பின்பற்றாமல் நடந்து கொண்டுள்ளனர்." இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
தலைமைக் குற்றவியல் மாஜிஸ்திரேட் செளந்தரேஷ் முன்பு இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், பெங்களூர் உதவி போலீஸ் கமிஷனர் ஓம்காரய்யா, செப்டம்பர் 13-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார். இதுதொடர்பாக ஓம்காரய்யாவுக்கு சம்மன் அனுப்பும்படி அவர் உத்தரவிட்டார்.

0 கருத்துகள்: on "அப்துல் நாஸர் மஃதனி கைது செய்யப்பட்ட வழக்கு: பெங்களூர் உதவி போலீஸ் கமிஷனருக்கு கொல்லம் நீதிமன்றம் சம்மன்"
கருத்துரையிடுக