2 செப்., 2010

குஜராத்:சமூக சேவகர் கொலை - விசாரணை வளையத்தில் பாஜக எம்.பி

அகமதாபாத்,செப்.2: குஜராத் அமைச்சர் அமித்ஷா போலி என்கவுண்டர் வழக்கில் சிக்கி சிறைக்குச் சென்ற செய்திகளின் தாக்கம் குறைவதற்குள் குஜராத் பாஜக எம்.பி. ஒருவருக்கு கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக வெளிவந்த செய்திகள் பாஜகவினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூக சேவகரான அமித் ஜேத்வா குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். குஜராத் மாநிலத்தின் கிர் காட்டுப் பகுதியில் உள்ள கனிம வளங்கள் சட்ட விரோதமாக தோண்டியெடுக்கப் படுவதாக புகார் கூறி வந்தார். இது குறித்த விவரங்களைத் தெரிவிக்குமாறு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அரசிடம் தகவல்களைக் கேட்டிருந்தார். குஜராத் அரசு மெத்தனம் காட்டவே, குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஜேத்வா பொது நல வழக்குத் தொடர்ந்தார்.

வழக்குத் தொடரப்பட்ட சில தினங்களில் (கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி) அஹ்மதாபாத் உயர்நீதிமன்றம் அருகே அவர் சென்ற போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஜேத்வாவை சுட்டுக் கொன்று விட்டு தப்பியுள்ளனர்.

இந்த கொலை தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் பகதூர் சிங் வதேர் என்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது பாஜக எம்.பி.யான தீனு போகா சோலங்கியின் உறவினரான சிவா சோலங்கி தான் அஜித் ஜேத்வாவை கொலை செய்ய உத்தரவிட்டதாகவும், அதற்காக ரூபாய் 11 லட்சம் தந்ததாகவும், அதன் அடிப்படையில் பச்சன் சிவா, சைலேஷ் பாண்யா ஆகியோரை கூலிக்கு அமர்த்தி கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார் பகதூர் சிங்.

பச்சன் சிவா, சைலேஷ் பாண்யா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் சிவா சோலங்கியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் சிவா சோலங்கி கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுரங்கத் தொழில் குறித்து பொது நல வழக்குத் தொடர்ந்த காரணத்தினால் தான் அமித் ஜேத்வா கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியாக்கப் பட்டுள்ளதால், சந்தேகப் பார்வை பாஜக எம்.பி. தினு போகா சோலங்கி மீது திரும்பியுள்ளது.

தினு போகா சோலங் கியின் குடும்பத்தினர் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளதினா லும், சிவா சோலங்கி, தினு போகா சோலங்கியின் உறவினர் என்பதினாலும் அவர் மீது சந்தேகம் வலுத்துள்ளது.
இந்தக் கொலைக்குக் காரணம் ஜுனகாத் தொகுதி பாஜக எம்பியான சோலங்கிதான் என்றும், அவரை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி காப்பாற்ற முயலுவதாகவும் அமித்ஷா ஜேத்வாவின் தந்தை பிகாபாய் ஜேத்வா குற்றஞ் சாட்டியுள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவர்க ளான வாஜ்பாய், அத்வானி ஆகி யோர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். வருங்காலங் களில் பிரதமர் பதவி வேட்பாள ராக்க நரேந்திர மோடியை முன் நிறுத்த பாஜகவில் உள்ள ஒரு பிரிவினர் முயற்சித்து வருகின்றனர். இதற்கு, குஜராத் மாநில அரசு அடிக்கடி பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வது இடைஞ்சலாக உள்ளது.

2002ல் கோத்ரா சம்பவத்திற் குப் பிறகு நடைபெற்ற முஸ்லிம் இனப் படுகொலை விவரங்களை டெஹல்காவின் முன் பாஜக பிரமுகர்கள் வாக்கு மூலமாக அளித்தது, இஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டுமென இஸ்ரத் ஜஹா னின் தாயார் தாக்கல் செய்த மனுவை அஹ்மதாபாத் உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

சொராஹ்புதீனின் போலி என் கவுண்டர் வழக்கில் குஜராத் அமைச்சர் அமித்ஷா கைது செய் யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது ஆகியவை நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்த முயலும் பாஜகவினரின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைதான் பாஜகவிற்கு இப்போது!

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "குஜராத்:சமூக சேவகர் கொலை - விசாரணை வளையத்தில் பாஜக எம்.பி"

கருத்துரையிடுக