டொராண்டோ,செப்.18:புனித திருக்குர்ஆனின் பிரதியை எரிக்கப் போவதாக அறிவித்த ஃப்ளோரிடா சர்ச்சின் பாதிரி மன்னிப்புக்கோர வேண்டும் என கிறிஸ்தவ அமைப்பான வேர்ல்ட் இவாஞ்சினல் அலையன்ஸ்(W.E.A) கோரியுள்ளது.
ஆனால், இவ்விவகாரத்தில் மன்னிப்புக்கோர எண்ணவில்லை என பாதிரி டெர்ரி ஜோன்ஸை மேற்கோள்காட்டி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
செப்.11 உலக வர்த்தக மையம் தாக்கப்பட்ட நினைவு நாளில் புனித திருக்குர்ஆனின் பிரதிகளை எரிக்கப்போவதாக டெர்ரி ஜோன்ஸ் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வறிக்கை உலக அளவில் கடும் எதிர்ப்பையும், விவாதத்தையும் கிளப்பியது. வருத்தம் தெரிவிக்கமாட்டேன் என டெர்ரி ஜோன்ஸ் கூறியது கவலை அளிப்பதாக W.E.A அறிவித்துள்ளது.
வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கோருவது டெர்ரி ஜோன்ஸ் உருவாக்கிய மோதல் சூழலை தளர்த்தும் என அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
கனடாவில் வான்கோவரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச அளவிலான கிறிஸ்தவ அமைப்புதான் W.E.A என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "குர்ஆன் பிரதி எரிப்பு:மன்னிப்புக்கோர பாதிரியிடம் கிறிஸ்தவ அமைப்பு கோரிக்கை"
கருத்துரையிடுக