18 செப்., 2010

செச்சனியா தலைவர் போலந்தில் கைது

குரோஸ்னி,செப்.18:செச்னியா தலைவர் அஹ்மத் ஸகயேவ் போலந்தில் கைதுச் செய்யப்பட்டார்.

ஸகயேவிற்கெதிராக ஏற்கனவே ரஷ்யாவின் மூலம் இண்டர்போல் கைது வாரண்ட் பிறப்பித்திருந்தது. இரண்டு தினங்கள் நடைபெறும் செச்சன் மாநாட்டில் கலந்துக் கொள்ள போலந்திற்கு வருகைத் தந்திருந்தார் ஸகயேவ்.

பிரிட்டனில் அரசியல் அபயம் தேடிய ஸகயேவிற்கெதிராக ஆள்கடத்தல், கொலை, ஆயுதகிளர்ச்சி நடத்தல் உள்ளிட்ட குற்றங்களை தொடுத்துள்ளது ரஷ்யா.

ஆனால் ஸகயேவை ரஷ்யாவிடம் ஒப்படைப்பதுக் குறித்து இதுவரை போலந்து தீர்மானிக்கவில்லை. கொலைச் செய்யப்பட்ட அஸ்லன் மஸ்கடோவின் செய்தித் தொடர்பாளர்தான் ஸகயேவ்.

மேற்கத்திய நாடுகளுக்கு செச்னியாவின் பிரதிநிதியாக ஸகயேவ் செயல்பட்டு வந்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "செச்சனியா தலைவர் போலந்தில் கைது"

கருத்துரையிடுக