வாஷிங்டன்,செப்.3:டிஸ்கவரி சேனலின் தலைமையகத்திற்குள் நுழைந்து மூன்று பேரை பிணைக் கைதிகளாக பிடித்த நபரை போலீஸ் சுட்டுக்கொன்று பிணைக் கைதிகளை மீட்டது.
நெஞ்சில் குண்டுகளைக் கட்டிக்கொண்டு கைத்துப்பாக்கியுடன் வாஷிங்டன் டி.சியில் அமைந்துள்ள டிஸ்கவரி சேனலின் தலைமையகத்திற்குள் நுழைந்த நபர் மீது குண்டுவெடிப்பை நிகழ்த்தப்போகிறார் எனக்கருதி போலீஸ் சுட்டுக்கொன்றது.
இதற்கு முன்பு ஃபோனில் பல மணிநேரம் போலீஸ் தாக்குதல் நடத்த வந்தவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஜெயிம் ஜெ லீ என்பவர்தான் தாக்குதல் நடத்த வந்தவர் என என்.பி.ஸி சேனல் செய்தி வெளியிட்டுள்ளது.
சாண்டியாகோவில் ஜெயிம்ஸ் லீ என்ற பெயரைக் கொண்ட நபர் 2008-ம் ஆண்டு டிஸ்கவரி சேனல் அலுவலகம் முன் போராட்டம் நடத்தியதால் கைதுச் செய்யப்பட்டார் என உள்ளூர் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பூமியை பாதுகாப்பதற்கு அவசியமானவற்றை டிஸ்கவரி சேனல் மேற்கொள்ளவில்லை என குற்றஞ்சாட்டித்தான் அந்த போராட்டம் நடத்தினார் ஜெயிம்ஸ் லீ.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "டிஸ்கவரி சேனலின் தலைமையகத்தை தாக்கியவர் சுட்டுக்கொலை"
கருத்துரையிடுக