கிஷ்த்வார்,செப்.3:ஜம்மு கஷ்மீரில் மாஜிஸ்ட்ரேட்டிடம் அவமரியாதையாக நடந்துக் கொண்ட வழக்கில் போலீஸ் சூப்பிரண்டையும்,சப்-இன்ஸ்பெக்டரையும் நீதிமன்றம் தலைமறைவுக் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது.
எஸ்.பி. ஃபயாஸ் அஹ்மத், எஸ்.ஐ ரன்பீர் சிங் ஆகியோரைத்தான் கிஷ்த்வார் கூடுதல் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் ஆர்.கே.கேசவன் தலைமறைவுக் குற்றவாளிகளாக அறிவித்துள்ளார்.
ஐந்து வாரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லையெனில் இவர்களின் அசையாச் சொத்துக்கள் மற்றும் அசையும் சொத்துக்கள் கையகப்படுத்தப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் எட்டாம் தேதி கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ்வின் கிஷ்த்வார் சுற்றுப்பயணத்தின் பொழுது பணியிலிருந்த மாஜிஸ்ட்ரேட்டிடம் இவர்கள் முறைகேடாக நடந்துக்கொண்டார்கள் என்பது குற்றச்சாட்டு. இவர்களுக்கு முதலில் நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. பின்னர் ஜாமீன் வாரண்டும் அதன் பின்னர் ஜாமீன் இல்லா வாரண்டும் பிறப்பிக்கப்பட்டிருந்தன.
இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டிற்கு ரிவிஷன் மனுவை சமர்ப்பித்திருந்தனர்.மாஜிஸ்ட்ரேட் இம்மனுவை தள்ளுபடிச் செய்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "கஷ்மீர்:போலீஸ் சூப்பிரண்டும் எஸ்.ஐயும் தலைமறைவுக் குற்றவாளிகள்"
கருத்துரையிடுக