லண்டன்,செப்.4:மன்மோகன் சிங் அபூர்வமான இந்திய பிரதமர் என்று பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் புகழாரம் சூட்டியுள்ளார். 'எனது பயணம்' என்ற பெயரில் அவர் எழுதியுள்ள சுயசரிதையில், தனது மனம் கவர்ந்த உலகத் தலைவர்கள் சிலரைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
அவர்களுள் மன்மோகன் சிங்கும் ஒருவர். 1997 முதல் 2007 வரை பிரிட்டிஷ் பிரதமராக இருந்த டோனி பிளேர், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் பல்வேறு சமயங்களில் நேரிலும், தொலைப்பேசியிலும் பேசியுள்ளார்.
'ஐரோப்பாவைப் பிரிந்து தனியாகச் செயல்படுவது பிரிட்டனின் நலனுக்கு உகந்தது அல்ல’ என்று பொருளாதார வல்லுநரான மன்மோகன் சிங், டோனி பிளேருக்கு அப்போது ஆலோசனை கூறியுள்ளார்.
அதனைக் குறிப்பிட்டு எழுதியுள்ள டோனி பிளேர்,மன்மோகன் சிங் அபூர்வமான இந்திய பிரதமர் என்று வர்ணித்துள்ளார். இந்திய தலைவர்கள் வேறு யாரையும் அவர் தனது சுயசரிதையில் குறிப்பிடவில்லை.

0 கருத்துகள்: on "மன்மோகன் சிங் அபூர்வமான பிரதமராம் டோனி பிளேர் புகழாரம்"
கருத்துரையிடுக