புதுடெல்லி,செப்.16:ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு ஆயுதச் சட்டத்தை வாபஸ் பெறுதல், சுயாட்சி போன்ற விஷயங்களை விவாதிக்க கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிவெடுக்காமல் கலைந்தது.
வன்முறை அதிகரித்துவரும் கஷ்மீருக்கு அனைத்துக் கட்சியினர் அடங்கிய குழு ஒன்றை அனுப்புவது என்ற தீர்மானம் மட்டுமே 5 மணிநேரம் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இதுத்தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில், அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு சமாதான பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண்பதுக் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு கஷ்மீர் செல்லும். இதற்கான முயற்சிகளை மத்திய உள்துறை அமைச்சகமும், கஷ்மீர் மாநில அரசும் செய்யும். அனைத்துக் கட்சி பிரதிநிதிக் குழுவினர் கஷ்மீர் சென்று அனைத்து அரசியல் கட்சியினரையும் சந்தித்து கருத்துக்களை ஆராய்வர். கஷ்மீர் மக்களின் எண்ணங்களை புரிந்துக் கொள்வதே இதன் நோக்கமாகும்.
அனைத்துக்கட்சி பிரதிநிதிக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.
கஷ்மீர் விவகாரம் தொடர்பான 6 விஷயங்களைக் குறித்து நடந்த விவாதத்தில் பல்வேறு கட்சிகளின் நிலைப்பாடுகள் வேறுபட்டதாக இருந்தன. காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் நிலவியதால் தீர்மானம் எடுப்பது எளிதல்ல என்று முன்னரே உறுதியானது. காங்கிரஸ் கட்சியின் கோர் கமிட்டிக் கூட்டத்திலும், பாதுகாப்புத்தொடர்பான மத்திய அமைச்சரவையின் கூட்டத்திலும் கஷ்மீர் தொடர்பாக முடிவெடுக்க இயலவில்லை.
சிறப்பு ஆயுதச்சட்டத்தை சில பகுதிகளில் வாபஸ் பெறுவது, வன்முறையை கட்டுப்படுத்துவது, செய்யத் அலிஷா கிலானி போன்ற தலைவர்களுடன் பேச்சுவார்த்தை, அடிப்படை வசதிகள் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஆகியவைத் தொடர்பான திட்டம், சீக்கியர்கள் மற்றும் கஷ்மீரி பண்டிட்டுட்கள் மீண்டும் கஷ்மீருக்கு வருகை, சரணடையும் போராளிகளுக்கு மறுவாழ்வு உள்ளிட்ட விஷயங்கள்தான் நேற்று விவாதிக்கப்பட்டது.
ஜம்மு-கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதற்கு பதிலாக ஃபாரூக் அப்துல்லாஹ் கூட்டத்தில் கலந்துக் கொண்டார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமை வகித்த இக்கூட்டத்தில் பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானி, பி.டி.பி தலைவர் மெஹ்பூபா முஃப்தி ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.
கஷ்மீர் மக்கள் வன்முறையை கைவிட தயாராகவேண்டும் என கூட்டத்தில் உரைநிகழ்த்திய பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார். "தாக்குதலை கைவிடும் எவருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார். பேச்சுவார்த்தையின் மூலமே பிரச்சனைகளுக்கு தீர்வு காண இயலும். அதற்காக எல்லா பிரிவினருடனும் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது.
ஏராளமான உயிர்சேதம் ஏற்பட காரணமான தற்போதைய நிகழ்வுகளைக் குறித்து அதிக கவலை உண்டு. மாநிலத்தில் நடந்த சில அசம்பாவிதங்கள் திட்டமிடப்பட்டதாகும். இளைஞர்களும், பெண்களும் வன்முறையில் ஈடுபடுவது கவலை அளிக்கிறது." இவ்வாறு பிரதமர் உரை நிகழ்த்தினார்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் கலந்துக் கொள்ளாததை பா.ஜ.க விமர்சித்தது. சிறப்பு ஆயுதச் சட்டத்தை சில பகுதிகளில் வாபஸ் பெறுவதால் மட்டும் பிரச்சனைக்கு பரிகாரமாகாது என பி.டி.பி கட்சித் தலைவர் மெஹ்பூபா முஃப்தி தெரிவித்தார்.
மத்திய அமைச்சர்களான பிரணாப் முகர்ஜி, ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், பா.ஜ.க தலைவர்களான நிதின் கட்காரி, அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், சி.பி.எம் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரட், சி.பி.ஐ பொதுச்செயலாளர் ஏ.பி.பரதன் ஆகியோர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "அனைத்துக் கட்சிக் குழு கஷ்மீர் செல்கிறது"
கருத்துரையிடுக