16 செப்., 2010

கஷ்மீர்:போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஐந்துபேர் மரணம்

பூஞ்ச்,செப்.16:ஜம்மு-கஷ்மீரில் மிஷனரி பள்ளிக்கூடத்திற்கு தீவைக்க முயன்றதாக கூறப்பட்ட மக்கள் கூட்டத்தின் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் மரணமடைந்தனர். 13 பேருக்கு காயம் ஏற்பட்டது.

அமெரிக்காவில் திருக்குர்ஆன் அவமதிக்கப்பட்டதை கண்டித்து 3 ஆயிரம் மக்கள் மந்தரில் போராட்டம் நடத்தினர். ஒரு மருத்துவமனை வாகனத்தை போராட்டகாரர்கள் தீவைத்துக் கொளுத்தினர்.

மிஷனரி பள்ளிக்கூடத்தை தீவைத்துக் கொளுத்த முயன்ற கூட்டத்தை கலைக்க போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் மரணமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

ட்ரஸரரி, தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களும், இரண்டு போலீஸ் வாகனங்களையும் போராட்டக்காரர்கள் தீவைத்துக் கொளுத்தினர். எல்லை நகரமான மண்டியிலும் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். இரண்டாவது நாளான நேற்றும் பூஞ்சில் ஊரடங்கு உத்தரவுத் தொடர்ந்தது. கூடுதல் பாதுகாப்புப் படையினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

கிஷ்த்வார், தோடா, பதேர்வ, ரஜவ்ரி, ராம்ஸோ, பனிஹல் ஆகிய இடங்களிலும், ஜம்மு-கஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையிலும் கண்டனப் போராட்டங்கள் நடந்தன. ஆனால், இவ்விடங்களில் அசம்பாவிதங்கள் ஒன்று நடக்கவில்லை. ஸோப்போரிலும், பாரமுல்லாவிலும் மக்கள் கூட்டம் அரசு அலுவலகங்களை தீவைக்க முயன்ற பொழுதும் போலீஸ் கட்டுப்படுத்தியது.

குப்வாரா மாவட்டத்தில் போலீசாரும், போராட்டக்காரர்களும் இடையே நடந்த மோதலில் 25 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதற்கிடையே, பி.டி.பி கட்சியும், ஜம்மு கஷ்மீர் தேசிய மதசார்பற்ற அமைப்பும் மதநல்லிணக்கத்தை பேண மக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

சமூகவிரோதிகள் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாக பி.டி.பி தலைவர் தமன்பஸில் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கஷ்மீர்:போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஐந்துபேர் மரணம்"

கருத்துரையிடுக