16 செப்., 2010

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு:உ.பி மாநிலத்தில் எல்லா மாவட்டங்களிலும் தற்காலிக சிறைகள்

முஸாஃபர்நகர்,செப்.16:அயோத்தியாவில் பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பாக அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவிருக்கும் சூழலில் உ.பி.மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தற்காலிக சிறைகள் திறக்கப்படும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முஸாஃபர் நகர், மீரட், பூலந்த் ஷஹர், காஸியாபாத், ஸஹாரன்பூர், பிஜநோர் மாவட்டங்களில் சிறைகளாக பயன்படுத்த சில கல்லூரிகளையும், அரசு கட்டிடங்களையும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பாக அளிக்கப்படவிருக்கும் தீர்ப்பையொட்டி சமாதான, சமூக நல்லிணக்கத் தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உ.பி.அரசு எடுத்துவருவதாக அரசு அதிகாரி தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு:உ.பி மாநிலத்தில் எல்லா மாவட்டங்களிலும் தற்காலிக சிறைகள்"

கருத்துரையிடுக