ஸ்ரீநகர்,செப்.16:டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கஷ்மீர் பள்ளத்தாக்கின் மோதலுக்கு ஓய்வை ஏற்படுத்த தீர்வாகாது என ஹுர்ரியத் மாநாட்டுக் கட்சியின் தலைவர் செய்யத் அலிஷா கிலானி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன்சிங் தனது உரையில் கஷ்மீர் பிரச்சனையின் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை உட்படுத்தவில்லை என கிலானி குற்றஞ்சாட்டுகிறார்.
"பேச்சுவார்த்தை மூலம் பயன் தரத்தக்க ஏதேனும் உருவாகும் எனத் தோன்றவில்லை. வன்முறை மற்றும் தீவைப்பு சம்பவங்களுக்கு பின்னணியில் யார் செயல்படுகிறார்கள் என்பது தங்க்மர்க் சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது. வன்முறைகள் சிலரின் தூண்டுதல்பேரில் நடைபெறுகிறது" என்ற பிரதமரின் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கவே கிலானி தெரிவித்தார்.
கடந்த திங்கள் கிழமை மக்கள் கூட்டத்தை வன்முறைக்கு தூண்டிய குற்றத்திற்கு தேசிய மாநாட்டுக் கட்சியின் உறுப்பினருக்கு எதிராக போலீஸ் வழக்கு தொடர்ந்திருந்தது.
கொலை, தீவைப்பு, கலவரம் உள்ளிட்ட குற்றங்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. "எங்களின் போராட்டங்கள் அமைதியான வழியிலானவை" என கிலானி தெரிவித்தார்.
"நாங்கள் தான் தாக்குதல்களுக்கு அதிகமாக பலியாகிறோம். நாங்கள் சமாதானத்தை விரும்புகிறோம். ஆனால் அந்த சமாதானம் கண்ணியமாக இருக்கவேண்டும். கஷ்மீர் பிரச்சனைக்கு நான் முன்வைத்த கோரிக்கைகளை காது கொடுக்க மத்திய அரசு மறுத்த சூழலில் எங்களின் லட்சியத்திற்கான போராட்டம் சமாதான முறையில் தொடரும்." இவ்வாறு கிலானி தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அனைத்துக் கட்சிக் கூட்டம் கஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வாகாது: கிலானி"
கருத்துரையிடுக