20 செப்., 2010

மலேகானில் ஷஹீத் ஹேமந்த் கர்காரே சாலை

மலேகான்,செப்,20:மும்பை தாக்குதலில் மர்மமான முறையில் கொல்லப்பட்ட மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படையின் தலைவர் ஹேமந்த் கர்காரேயின் பெயரில் இனி மலேகானில் பிக்குசவுக்-சாஸ்திரி சவுக் சாலை அழைக்கப்படும்.

நேற்று முன்தினம் நாஸிக் மாவட்டத்தில் ஆடைத் தயாரிப்பின் மையமாக விளங்கும் மலேகானில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அப்பிரதேச எம்.எல்.ஏவும், ஜும்மா மஸ்ஜித் இமாமான மவ்லான முஃப்தி முஹம்மது இஸ்மாயீல் ஷஹீத் ஹேமந்த் கர்காரே என்ற பெயரை சாலைக்கு சூட்டினார்.

இதுத் தொடர்பாக மலேகான் முனிசிபல் கார்பரேசன் ஏற்கனவே தீர்மானித்திருந்தது.

2008 ஆம் ஆண்டு செப்டம்பரில் மலேகானில் பிக்கு சவுக்கில் நடந்த குண்டுவெடிப்பில் ஆறுபேர் கொல்லப்பட்டிருந்தனர். இவ்வழக்கை விசாரித்துக்கொண்டிருக்கும் வேளையில்தான் ஹேமந்த் கர்காரே மும்பைத் தாக்குதலின் பொழுது மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

தாக்குதலுக்கு முன்பு கர்காரேக்கு கொலை மிரட்டல் வந்தது. அபினவ் பாரத் என்ற சங்க்பரிவார பயங்கரவாத அமைப்புதான் இந்த குண்டுவெடிப்பிற்கு பின்னணியில் இருக்கிறது என்பதை கர்காரே கண்டறிந்தார்.

இவ்வழக்கில் சன்னியாசினியும் முன்னாள் ஏ.பி.வி.பி தலைவருமான பிரக்யாசிங் தாக்கூர், ராணுவத்தில் பணியாற்றிய ஸ்ரீகாந்த் புரோகித் உள்ளிட்டோர் கைதுச் செய்யப்பட்டிருந்தனர்.

தேசத்தில் நடந்த குண்டுவெடிப்புகளின் பின்னணியில் முஸ்லிம்கள் என்ற அவதூறு பிரச்சாரம் நடந்துக் கொண்டிருந்த வேளையில்தான் உண்மையான குற்றவாளிகள் ஹிந்துதுவா பயங்கரவாதிகள் என்ற உண்மையை கர்காரே வெளிக்கொணர்ந்தார்.

இந்நிலையில் அவரின் உயிரைப் பறிக்க கங்கணம் கட்டிக்கொண்டு வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தனர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.

மலேகானில் குண்டுவைத்த தீவிரவாதிகளை கைதுச் செய்ததோடுதான் அதற்கு முன்பு நடந்த மக்கா மஸ்ஜித், அஜ்மீர், நந்தத், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ஆகிய குண்டுவெடிப்புகளிலும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் கைவரிசை வெளிப்படுத்தப்பட்டது. அதற்கு நன்றி செலுத்தும் விதமாகத்தான் அப்பிரதேச சாலைக்கு கர்காரேயின் பெயரை சூட்டியதாக தெரிவிக்கிறார் முஃப்தி முஹம்மது இஸ்மாயீல்.

முஸ்லிம்களின் மீது தீவிரவாதக் குற்றம் சுமத்தப்பட்ட பொழுது தீவிரவாதத்திற்கு மதமில்லை என்று எவரும் கூறவில்லை. ஆனால், கர்காரே காவித் தீவிரவாதத்தின் முகமூடியை கிழித்தெறிந்த பொழுது, தீவிரவாதத்திற்கு மதமில்லை என சிலர் கூறுகின்றனர் என முஹம்மது இஸ்மாயீல் கிண்டலாக கூறினார்.

மலேகான் கார்ப்பரேசன் கமிஷனர் ஜீவன் ஸோனாவானா, முன்னாள் மேயர் ரஷீத் ஸேத் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

சங்க்பரிவார் பயங்கரவாதத்தின் கூடுதல் விபரங்கள் வெளிவருவதை தடைச்செய்ய மும்பைத் தாக்குதலின் மூலம் ஹிந்த்துவா பயங்கரவாதிகள்தான் கர்காரேயை கொன்றனர் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மலேகானில் ஷஹீத் ஹேமந்த் கர்காரே சாலை"

கருத்துரையிடுக