ஹைதராபாத்,செப்,20:பாப்ரி மஸ்ஜித் நிலைக்கொண்டிருந்த நிலம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு வரவிருக்கும் வேளையில் முஸ்லிம்கள் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அரசியல் சட்டத்திற்கு உள்பட்டு முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என சட்டவாரியத்தின் செயல் பொதுச் செயலாளர் ரஹீம் குரைஷி தெரிவித்தார்.
நீதிமன்றத் தீர்ப்பு எதிராக வந்தாலும் அதனை எதிர்க்கத் தேவையில்லை. சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடுச் செய்ய வழி உண்டு. சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாக்க வேண்டும்.
நீதிமன்றத் தீர்ப்பு வெளிவரும் நாளில் வன்முறையிலிருந்து விடுபட்டு நிற்கவேண்டும்." இவ்வாறு குரைஷி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கிடையே பாப்ரி மஸ்ஜித் தொடர்பான வழக்குகளை கையாளும் முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் சிறப்பு கமிட்டி நேற்று டெல்லியில் கூடி அயோத்தியா பிரச்சனையை விவாதித்தது.
எல்லா முஸ்லிம் அமைப்புகளின் மூலமாக விரிவான வேண்டுகோளை தனியார் சட்டவாரியம் இன்று வெளியிடும் என கமிட்டியின் கண்வீனர் எஸ்.க்யூ.ஆர். இலியாஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்: முஸ்லிம் தனியார் சட்டவாரியம்"
கருத்துரையிடுக