புதுடெல்லி,செப்.24:காமன்வெல்த் விளையாடுப் போட்டிகளின் ஏற்பாட்டை விமர்சித்த காமென்வெல்த் விளையாட்டுப் போட்டி பெடரேசன் தலைவர்களான மைக் ஹூப்பரும், மைக்கேல் ஃபென்னலும் கல்மாடியின் ஆட்கள் என காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் அய்யர் விமர்சித்துள்ளார்.
இவர்கள் போட்டி ஏற்பாடுகளின் கடைசி நிமிடத்தில் அதனை விமர்சித்ததற்கு காரணம் கல்மாடியின் ஆதரவாளர்களானதால்தான்.
துவக்கம் முதலே அவர்கள் கல்மாடிக்கு ஆதரவாகவே செயல்பட்டார்கள். பெடரேசனின் தோல்வியை மறைக்க தற்பொழுது அவர்கள் குற்றச்சாட்டுகளுடன் களமிறங்கியுள்ளனர் என ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றும் பொழுது மணிசங்கர் அய்யர் கூறினார்.
காமன்வெல்த போட்டி ஏற்பாடு கமிட்டியின் தலைவராக பணியாற்றிய கல்மாடியை பின்னர் அரசு அப்பதவியிலிருந்து நீக்கியிருந்தது. காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடக்கும் முறைகேடுகளுக்கெதிராக முதலில் களமிறங்கியவர் மணிசங்கர் அய்யர்
என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஹூப்பரும், ஃபென்னலும் கல்மாடியின் ஆதரவாளர்கள் மணிசங்கர் அய்யர்"
கருத்துரையிடுக