நியூயார்க்,செப்.24:கஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதியான தீர்வை காணவேண்டும் என இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான ஒ.ஐ.சி வலியுறுத்தியுள்ளது.
இது இரண்டு நாடுகளின் மக்களுக்கு மட்டுமல்ல கஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு பயன் தரத்தக்க வகையில் அமையும் என அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
சமரசத்தின் மூலம் தீர்வு காண இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஒ.ஐ.சியின் பொதுச்செயலாளர் இக்மாலுத்தீன் இஹ்ஸானோக்லு தெரிவித்தார்.
ஒ.ஐ.சியின் வருடாந்திர கூட்டத்தில் கஷ்மீர் நட்புறவு குழுவிடம் இதனைத் தெரிவித்தார் அவர்.
கஷ்மீர் நிலைமைக் குறித்து கவலைத் தெரிவித்த அவர் மக்களுக்கு எதிராக பலம் பிரயோகிப்பதில் கவலை உள்ளதாக தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "கஷ்மீர்:அமைதியான முறையில் தீர்வு காணவேண்டும் - ஒ.ஐ.சி"
கருத்துரையிடுக