காபூல்.செப்.24:ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் கொல்லப்பட்டவர்கள் அமெரிக்க ராணுவத்தினர் என பெண்டகன் அறிவித்துள்ளது.
ஆனால், ஹெலிகாப்டர் எவ்வாறு விபத்திற்குள்ளானது என்பதுக் குறித்து தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
ஸபூல் மாகாணத்தில் தய்சோவான் பகுதியில்தான் ஹெலிகாப்டர் தகர்ந்து வீழ்ந்தது. போராளிகளின் தாக்குதல் இல்லை என நேட்டோ தெரிவித்தாலும், ஹெலிகாப்டரை வீழ்த்தியது தாங்கள் தான் என தாலிபான் போராளிகள் அறிவித்திருந்தனர்.
2006 மே மாதம் சினூக் ஹெலிகாப்டர் தகர்ந்து வீழ்ந்ததில் 10 அமெரிக்கர்கல் கொல்லப்பட்டிருந்தனர். இதற்கு பிறகு நடந்த அமெரிக்க ராணுவத்தினருக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியது இதுவாகும்.
சாலை வழியிலான போக்குவரத்து சிரமத்தை ஏற்படுத்துவதால், நேட்டோ ராணுவத்தினர் சரக்குகளைக் கொண்டு செல்வதற்கும், ராணுவத்தினரை அழைத்துச் செல்வதற்கும் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகின்றனர்.
தோளில் வைத்து ஏவும் ஏவுகணைகள் இல்லாமலேயே இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் ஃப்ரொஃபல்ட் கிரேனேடுகளை பயன்படுத்திதான் தாலிபான் ஹெலிகாப்டர்களின் மீது தாக்குதல் நடத்துகிறது என்பதுக் குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஆப்கானிஸ்தான்:ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்டவர்கள் அமெரிக்க ராணுவத்தினர்"
கருத்துரையிடுக