பாகிஸ்தான் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றிற்கு மும்பைத் தாக்குதலைக் குறித்து சர்ச்சைக்குரிய பேட்டியளித்த பாலிவுட் நடிகர் சல்மான் கான் எதிர்பாராமல் கிடைத்த ஆயுதமானார்.
மும்பை நகரசபைத் தேர்தலுக்கு மஹாராஷ்ட்ரா அரசியல் கட்சிகளெல்லாம் உபாயங்களை கையாள்வதுக் குறித்தும் பொதுமக்களை கவரக்கூடிய விஷயங்களைக் குறித்தும் ஆராய்ந்து வரும் சூழலில்தான் சிவசேனாவிற்கு சல்மானின் பேட்டி கையில் கிடைத்தது.
சல்மான்கான் மீது பாய்ந்து விழுந்து தனது கட்சியினரை உசுப்பிவிட்ட சிவசேனா தலைமை திடீரென பல்டியடித்து சல்மான்கானின் குடும்பத்தினரின் தேசப்பற்றிற்கு? முன்னால் தலை கவிழ்த்தது. இதன்மூலம் சல்மானின் விவகாரம் முடிவுக்கு வந்தது.
சிவசேனாவின் இந்த பல்டிக்கு பின்னணியில் அக்கட்சிக்கு ஆப்பு வைப்பதற்கே பிறந்துள்ள ராஜ் தாக்கரேயின் நிலைப்பாடுதான் காரணமாகும்.
காங்கிரஸ் தலைவரான மஹாராஷ்ட்ரா முதல்வர் அசோக் சவான் கூட சல்மானுக்கு எதிராக மாறிய பொழுதும் ராஜ் தாக்கரே தனது நண்பரான சல்மானிற்கு ஆதரவாகவே நின்றார்.
2008 ஆம் ஆண்டு மும்பைத் தாக்குதல் அதிக கவனத்தை ஈர்த்ததின் காரணம், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும், செல்வந்தர்களும், சமூகத்தில் உயர் அந்தஸ்தில் உள்ளவர்களும் தாக்குதலுக்குள்ளானதுதான் என சல்மான் கான் கூறியதுதான் விவாதத்தை கிளப்பிவிட்டது.
பாகிஸ்தானிலிருந்து ஒளிபரப்பாகும் எக்ஸ்பிரஸ் டி.வி என்ற தொலைக்காட்சி அலைவரிசைக்கு சல்மான் கான் இதுக்குறித்து பேட்டியளித்திருந்தார். சபர்பன் ரெயில்களிலும், மும்பை நகரத்திலும் நடந்த தாக்குதல்கள் 2008 மும்பைத் தாக்குதலைப்போல் விவாதமாக மாறவில்லை என அப்பேட்டியில் சல்மான்கான் நினைவுக் கூர்ந்திருந்தார்.
பாகிஸ்தான் திட்டமிட்டு நடத்தியதாக கூறப்படும் ஒரு தாக்குதலைக் குறித்து அந்நாட்டு தொலைக்காட்சி அலைவரிசையிலேயே சல்மான்கான் பேட்டியளித்தது சிவசேனாப் போன்ற கட்சியினருக்கு வெறும் வாய்க்கு அசைப்போட அவல் என்ன பிரியாணியே கிடைத்தது போலல்லவா? அதுவும் கட்சியின் பலத்தை நிரூபிக்கும் மும்பை நகரசபையின் தேர்தல் அடுத்துவரும் சூழலில். அதிகாரம் கைநழுவாமலிருக்க உத்தவ் தாக்கரேயும் அவரது கட்சியினரும் வித்தைகளை பயிற்றுவித்து வரும் சூழலில் இந்த வாய்ப்பை நழுவ விடுவார்களா?
சிவசேனாவுடனும், உத்தவ் தாக்கரேக்குமெதிராக போர் பிரகடனம் செய்து ராஜ் தாக்கரே களமிறங்கிய பொழுதும் மும்பை நகரசபையின் ஆட்சியை சிவசேனா நிலைநிறுத்தியதற்கு காரணம் பால்தாக்கரேயின் உற்றத்தோழர் சரத்பவாரின் கருணைப் பார்வையால்தான் என்பது வேறு விஷயம்.
சிவசேனாவிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றும் ஆற்றல் தங்களுக்குண்டு என்பதை கடந்த சட்டமன்ற-பாராளுமன்றத் தேர்தல்களில் ராஜ்தாக்கரேயின் மஹாராஷ்ட்ரா நிர்மாண சேனா நிரூபித்தது.
சமீபகாலமாக, மராட்டியம் மராட்டியருக்கு உள்ளிட்ட சிவசேனாவின் கோஷங்களை முழக்கி ஆதாயம் பெற்றுவருவது மஹாராஷ்ட்ரா நிர்மாண் சேனாவாகும்.
ஷாரூக்கான் மற்றும் அவருடைய 'மை நேம் இஸ் கான்' என்ற சினிமாவுக்கெதிராக சிவசேனா வாள் ஏந்திய பொழுது ராஜ்தாக்கரே மெளனம் காத்தார். இவ்விவகாரத்தில் சிவசேனா அவமானப்பட்டு பின்வாங்கிய காட்சிக்கு மும்பை நகரம் சாட்சி பகர்ந்தது.
சிவசேனாவின் போராட்டங்களுக்கும், தெருச் சண்டைகளுக்கும் பயந்து நிற்கும் மும்பை நகரத்தின் புதிய அனுபவமாகஅது மாறியது.
முழு அடைப்புகளிலும், இதர போராட்டங்களிலும் கல்வீசியும்,தீயிட்டுக் கொளுத்தியும் மும்பை நகரத்தை வன்முறைக்களமாக்கும் சிவசேனாவிற்கு நீதிமன்றமும் அபராதம் விதிக்கத் துவங்கியது.
நோயாலும், வயோதிகத்தாலும் ஓய்வெடுக்க பால் தாக்கரே முயன்றாலும், அடங்கி கிடப்பதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைப்பதில்லை. நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளைக் குறித்தும் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் பால்தாக்கரேயோ அல்லது அவரது பெயரில் அனாமதேயர்களோ தலையங்கம் எழுதி கட்சியினரை உசுப்பேத்தி வருவது வழக்கமாகிவிட்டது.
தற்பொழுது கட்சியினரை உசுப்பேத்த கிடைத்த ஆயுதம் தான் சல்மான்கான் விவகாரம். திடீரென கால் சுவடை மாற்றி வைத்துவிட்டு பால்தாக்கரே சாம்னாவில் சல்மான்கானின் தேசப்பக்தியை புகழ ஆரம்பித்தார்.
ஷாரூக்கானைப் போன்று அல்ல சல்மான்கானும் அவருடையகுடும்பத்தினரும். அவர்களுக்குத்தான் தேசத்தின் மீது உண்மையான பற்றும் அன்பும் உள்ளது. ஆதலால், சல்மானுக்கெதிராக கொந்தளிக்க வேண்டாம் என தாக்கரே சாம்னாவில் எழுதினார்.
ஆனாலும், சில உபதேசங்களையும் சல்மான் கானுக்கு கூறுகிறார் தாக்கரே. சில காரியங்களைக் குறித்து சல்மான் கான் புரிந்துக்கொள்ள வேண்டும்.இனிமேல் சல்மான் சினிமாவைக் குறித்து மட்டும்பேசினால் போதும். அரசியலைக் குறித்து விவாதிக்க வேண்டாம். தாக்கரே எழுதுகிறார். இவ்வாறு தேசத்துரோகி என்றுக் கூறிய நாவினாலே தாக்கரே சல்மானை தேசப்பற்றாளர் என சான்றளித்தார். பால்தாக்கரேயின் கால் இடறக் காரணம் வேறொன்றுமில்லை, சல்மான்கான் அபத்தமாக ஒன்றும் பேசமாட்டார் என ராஜ்தாக்கரே கூறியதுதான்.
சல்மானின் பேட்டியில் சில பகுதிகளை மட்டும் ஒளிபரப்பி தொலைக்காட்சி அலைவரிசை தவறாக புரிந்துக்கொள்ள வைத்துள்ளது என்பது ராஜ் தாக்கரேயின் வாதம்.
தீவிரவாதச் செயல்பாடுகளுக்காக பாகிஸ்தானை ஏற்கனவே சல்மான்கான் விமர்சித்துள்ளார் என்றும், அதனை சல்மான்கானை விமர்சிப்பவர்கள் கண்டும் காணாததுபோல் நடிப்பதாகவும் ராஜ்தாக்கரே கூறுகிறார். இத்தகையதொரு சூழலில், சல்மானின் புதிய திரைப்படமான 'தபக்'க்கிற்கெதிராக களமிறங்கினால், அது ஏற்கனவே ஷாரூக்கானின் 'மை நேம் கானி'ற்கு எதிராக களமிறங்கி பட்ட அனுபவம்தான் ஏற்படும் எனக் கருதிய தாக்கரே தமது சுவட்டை மாற்றியமைத்தார்.
சிவசேனாவைப் பொறுத்தமட்டில் சல்மானுக்கும் ஷாரூக்கானுக்குமிடையே வேறுப்பட்டக் கண்ணோட்டம் உள்ளது.
பிள்ளைகளின் மொபைல் ஃபோன்களில் திருக்குர்ஆன் வசனங்களை அனுப்பி இஸ்லாத்தோடு நெருங்கச் செய்யும் ஷாரூக்கின் செயல்கள் ஒன்றும் சல்மானிடம் இல்லை. ஏனெனில் சல்மானும், திரைக்கதை எழுத்தாளரான சலீம் கானும் 'தேசிய முஸ்லிம்கள்?' ஆவர்.
கணபதி திருவிழா நடைபெறும் நாளில் தனது வீட்டில் வைத்து 10 தினங்கள் கணபதி (அதுதான் நம்ம ஊரு விநாயகர்சிலை) சிலைக்கு பூஜை நடத்தி கடலுக்கு கொண்டுச்சென்று பிரதிஷ்டைச் செய்யும் வழக்கத்தை சல்மானின் குடும்பம் தொடர்ந்து செய்து வருகிறது. ஆதலால், அவர்களின் தேசப்பற்றைக் குறித்து பால்தாக்கரேக்கு சந்தேகிக்க வேண்டியதில்லை.
சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறி விவாதத்தில் சிக்கிய சல்மான், தாக்கரேக்களின் அரசியலால் தலைத் தப்பியதற்கு அவர்களுக்கே நன்றிக் கூறட்டும்.
விமர்சகன்

0 கருத்துகள்: on "சல்மானும், ஷாரூக்கும், தேசப்பற்றும்"
கருத்துரையிடுக