அகமதாபாத்,செப்.25:குஜராத்தில் கடந்த 2004-ம் ஆண்டு இளம்பெண் இஷ்ரத் ஜஹான் மற்றும் இதர மூன்று பேர் போலி என்கவுண்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை குஜராத் உயர் நீதிமன்றம் நியமித்து உத்தரவிட்டது.
முன்னதாக இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நியமிக்கும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்ற குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு குஜராத் மாநில அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இஷ்ரத் ஜஹானும் மற்ற மூவரும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியதையடுத்தே அவர்கள் நான்கு பேரையும் பிடிக்க முயன்று என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றதாக குஜராத் மாநில போலீஸார் தெரிவித்திருந்தனர்.

0 கருத்துகள்: on "இஷ்ரத் போலி என்கவுன்ட்டர் வழக்கு: மீண்டும் விசாரிக்க புதிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது குஜராத் உயர்நீதிமன்றம்"
கருத்துரையிடுக