பெய்ரூத்,செப்.8:லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரியை கொலைச் செய்யப்பட்டதில் சிரியாவிற்கு பங்குண்டு என குற்றஞ்சாட்டியது அபத்தமாகிப் போனது என தற்போதைய லெபனான் பிரதமரும் ஹரீரியின் மகனுமான சஅத் ஹரீரி கூறியுள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு பெய்ரூத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் ஹரீரி கொல்லப்பட்டார்."ஒருகட்டத்தில் நாங்கள் அபத்தமான காரியத்தைச் செய்தோம். பிரதமரின் கொலையில் சிரியாவை குற்றஞ்சாட்டினோம். அது ஒரு அரசியல் குற்றச்சாட்டாக அமைந்தது." என சவூதியிலிருந்து வெளிவரும் அல்ஸர்க் அல் அவ்ஸத் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் சஅத் கூறுகிறார்.
இச்சம்பவத்தைக் குறித்து ஐ.நா நடத்திவரும் விசாரணை பாரபட்சமற்றது எனத் தெரிவித்தார் அவர். ஹரீரிக் கொலையில் சிரியாவை குற்றஞ்சாட்டியதால் லெபனானிலிருந்து ராணுவத்தை பின்வாங்க சிரியாவுக்கு நிர்பந்தம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஹரீரிக் கொலை:சிரியாவை குற்றஞ்சாட்டியது அபத்தம் என லெபனான் பிரதமர்"
கருத்துரையிடுக