அஹ்மதாபாத்,செப்.24:சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய சாட்சியான அஸம்கான் சி.பி.ஐ பொய்சாட்சி அளிக்க தன்னை அச்சுறுத்தியதாக கூறி பல்டியடித்துள்ளார்.
துணை முதன்மை ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் எவிதாவே முன்பாக சமர்ப்பித்த சத்திய வாக்குமூலத்தில் கான் தான் முன்பு அளித்த வாக்குமூலத்திலிருந்து பின்வாங்குவதாக கூறியுள்ளார்.
கானின் வாக்குமூலத்தை குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ உட்படுத்தியிருந்தது.
சொஹ்ராபுத்தீன் வழக்கில் இன்னொரு சாட்சியான துளசிராம் பிரஜாபதி போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டார் என்பதுக் குறித்து தனக்கு ஒன்றுமே தெரியாது என கான் தெரிவித்துள்ளார்.
ஹமீத் லால் கொலை வழக்கை மீண்டும் புலனாய்வுச் செய்து தன்னை அதில் குற்றவாளியாக்கப் போவதாக சி.பி.ஐ மிரட்டியதைத் தொடர்ந்துதான் தான் சாட்சியம் அளித்ததாக கான் கூறியுள்ளார்.
"நாங்கள் கூறியபடி சாட்சியம் கூறாவிட்டால் வாழ்நாள் முழுவதும் சிறையில் கிடக்கவேண்டிய சூழல் ஏற்படும்" என சி.பி.ஐ மிரட்டியதாகவும் கான் சத்திய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "சொஹ்ராபுத்தீன் வழக்கு:முக்கிய சாட்சி பல்டி"
கருத்துரையிடுக