புனே,செப்.24:ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஹிமாயத் பெய்கிற்காக வாதாட முடிவுச்செய்துள்ள மஹாராஷ்ட்ரா மாநில தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு பொதுச்செயலாளர் வழக்கறிஞர் எ.ரஹ்மான் அப்பதவியை ராஜினாமாச் செய்துள்ளார்.
பெய்கிற்காக வாதாடுவதில் என்.சி.பியின் உயர்மட்டத் தலைவர்கள் அதிருப்தி வெளிப்படுத்தியதைத் தொடர்ந்துதான் இந்த ராஜினாமா.
பெய்கிற்காக இந்த மாதம் 20 ஆம் தேதி ரஹ்மான் நீதிமன்றத்தில் ஆஜரானார். ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு வழக்கில் தேசவிரோத மனப்பாண்மையை கவனத்தில் கொண்டு வழக்கறிஞர்கள் இவ்வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டோருக்காக வாதாடக் கூடாது என பார் அசோசியேசன் கோரியிருந்தது. ஆனால், அதனை புறக்கணித்துவிட்டு ஆஜராகியுள்ளார்.
ரஹ்மானின் முடிவு பார் அசோசியேசன் உறுப்பினர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தான் என்.சி.பியிலிருந்து விலகவில்லை எனவும், சிறுபான்மை பிரிவு பதவியை மட்டும் ராஜினாமாச் செய்துள்ளதாகவும் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "புனே:ஜெர்மன் பேக்கரி குற்றஞ்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் என்.சி.பியின் சிறுபான்மை பிரிவு பதவியை ராஜினாமாச் செய்தார்"
கருத்துரையிடுக