புதுடெல்லி,செப்.24:பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத்தடை அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை காலவரையற்று நீட்டும் வாய்ப்பு உருவாகாது என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் நம்பிக்கை தெரிவித்தார்.
நீதிமன்ற தீர்ப்பை ஒத்திவைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் வாதத்தை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கிடையேயே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.
கஷ்மீர் பிரச்சனை, மாவோயிஷம் உள்ளிட்ட மனுதாரர் முன்வைத்த தடைகளெல்லாம் இவ்வளவு காலமாகியும் தீர்க்கமுடியவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்தரனின் கூற்றும் பொருளுடையதாகும்.
வழக்கில் இரு கட்சிதாரர்களுக்கிடையே சமரசம் ஏற்படுத்த கூடுதல் முயற்சிகள் நடத்தவேண்டுமென்ற மனுதாரரின் மனுவை ஏற்கனவே அலகாபாத் நீதிமன்றம் தள்ளுபடிச் செய்துவிட்டது.
இவ்வழக்கில் எந்த கட்சிக்காரரும் சமரசத்திற்கு தயாரில்லை. இவ்வழக்கில் கட்சிதாரர் அல்லாத மத்திய அரசிடம் இதுத் தொடர்பாக சத்திய வாக்குமூலம் அளிக்க உச்சநீதிமன்றம் கோரியது தீர்ப்பு வழங்குவதை தேவையில்லாமல் நீட்டிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும்.
பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கு நீண்டகாலமாக தொடரும் சூழலில் விரைவில் தீர்ப்பு வழங்குவது தேசத்தின் விசாலமான விருப்பமாகும். இரு கட்சிதாரர்களுக்கும் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் அளிக்க வாய்ப்புண்டு.
எல்லாபிரிவு மக்களும் நீதிமன்ற தீர்ப்பிற்காக காத்திருப்பதாகவும், தேசத்தின் அமைதியையும், நல்லிணக்கத்தையும் எவ்விலைக் கொடுத்தும் நிலைநாட்டுவோம் எனவும் இ.எம்.அப்துற்றஹ்மான் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித் வழக்கு:தாமதப்படுத்தாதீர்கள் - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா"
கருத்துரையிடுக